Published : 14 Oct 2014 10:00 AM
Last Updated : 14 Oct 2014 10:00 AM

தமிழகத்தில் கூடுதலாக 30 கடலோரக் காவல் நிலையங்கள்: கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு தகவல்

தமிழகத்தில் கூடுதலாக 30 கடலோரக் காவல் நிலையங்கள் திறக்கப்படும் என்று தமிழக கடலோரக் காவல்படையின் கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

ராமேசுவரத்துக்கு திங்கள்கிழமை வந்த சைலேந்திரபாபு, கடலோரக் காவல் படையின் பயிற்சி மையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக ஓலைக்குடா கடலோரப் பகுதிகளைப் பார்வையிட்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

ராமேசுவரத்தில் கடலோரக் காவல் படையினருக்கு 247 ஏக்கரில் பயிற்சி மையம் அமையவுள்ளது. இதில் 200-க்கும் அதிகமான பயிற்சியாளர்கள் மூலம் ஒரே நேரத்தில் 2000 பேருக்கு பயிற்சி அளிக்க முடியும்.

தமிழகத்தில் தற்போது 12 கடலோரக் காவல் நிலையங்கள் உள்ளன. கடலோரப் பாதுகாப்பின் முக்கியத்துவம் கருதி, கூடுதலாக 30 காவல் நிலையங்கள் அமைக்க தமிழக அரசு அனுமதி அளித் துள்ளது. இதற்கான கட்டிடப் பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளன. கடலோரங்களில் மீனவர்கள் பங்களிப்புடன் ரோந்து, கண்காணிப்பில் கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக 500 மீனவ இளைஞர்கள் ஊர்க்காவல் படை மூலம் கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடல் வழியாக அந்நியர் ஊடுருவல் இல்லை. மேலும், கடல் வழியான கடத்தலும் பெருமளவில் குறைந்துள்ளது என்றார் சைலேந்திரபாபு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x