அதிமுக-வில் நிலவும் குழப்பத்தால் சேலத்தில் அமைச்சருக்கு எதிராக புதிய அணி

அதிமுக-வில் நிலவும் குழப்பத்தால் சேலத்தில் அமைச்சருக்கு எதிராக புதிய அணி
Updated on
2 min read

அதிமுக-வில் ஏற்பட்டுள்ள அதி காரப் போட்டியின் விளைவாக சேலம் மாவட்டத்தில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக புதிய அணி உருவாகி வருகிறது.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும், அதிமுக பொரு ளாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டியால் அதிமுக-வில் குழப்ப மான நிலை காணப்படுகிறது. பொதுச்செயலாளர் சசிகலா அணியில் இருந்து எம்எல்ஏ-க்கள், எம்பி.க்கள், அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொருவராக வெளியேறி ஓ.பன் னீர்செல்வம் அணிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மாநில அளவில் இந்த மாற்றம் நடைபெற்றுவரும் நிலையில், சசிகலா அணியில் இருக்கும் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக முன்னாள் எம்எல்ஏ-வும் ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளருமான எஸ்.கே.செல்வம் தலைமையில் ஒரு குழுவினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

அதிமுக-வில் சேலம் கிழக்கு, சேலம் மேற்கு என மாவட்டங்கள் இருந்தபோது, கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர் எஸ்.கே.செல்வம். இவர் தற்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக தன்னுடைய ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து வருகிறார். மேலும், கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு முக்கிய காரணம் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்று குற்றம்சாட்டி, அதிமுக- வின் முன்னாள், இந்நாள் நிர்வாகி களை அணி திரட்டி வருகிறார்.

இதுகுறித்து அதிமுக-வினர் கூறியதாவது:

எஸ்.கே.செல்வம் சேலம் கிழக்கு மற்றும் சேலம் மேற்கு மாவட்டங் களிலும் மாவட்ட செயலாளராக இருந்தவர். பின்னர் சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், கிழக்கு மாவட்டச் செயலாளராக எஸ்.கே.செல்வமும் இருந்தனர். இந் நிலையில், சசிகலா ஆதரவுடன் எடப் பாடி பழனிச்சாமி அமைச்சரானார்.

அந்த செல்வாக்கை பயன் படுத்தி, சேலம் மேற்கு, கிழக்கு என 2 ஆக இருந்த மாவட்டங்களை நிர்வாகக் காரணம் என்றுகூறி புறநகர் மாவட்டமாக இணைத்து, அதற்கு மாவட்ட செயலாளராக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். இதனால், எஸ்.கே. செல்வத்தின் மாவட்டச் செயலாளர் பதவி பறிபோனது.

ஆனால், புறநகர் மாவட்டத்தின் பல இடங்களில் இன்னமும் எஸ்.கே.செல்வத்தின் ஆதரவாளர்களே நிர்வாகிகளாக உள்ளனர். இந்நிலை யில், அதிமுக-வில் ஏற்பட்டுள்ள குழப்பமான நிலையில், ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து, மாவட்டத்தில் உள்ள அதிமுக-வினரை எஸ்.கே.செல்வம் ஒருங் கிணைத்து வருகிறார். இதனால், சேலம் மாவட்டத்தில் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடுமை யான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதனிடையே, எஸ்.கே.செல் வம் இரு தினங்களுக்கு முன்னர் தனது ஆதரவாளர்களான முன் னாள் எம்எல்ஏ-க்கள் ஆத்தூர் மாதேஸ்வரன், ஏற்காடு இளையக் கண்ணு, சேலம் ரவிச்சந்திரன் மற் றும் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் கேகே.மாதேஸ்வரன் ஆகியோருடன் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து ஆதரவை தெரிவித்துள்ளார்.

மேலும், ‘முதலமைச்சர் கனவில் இருக்கும் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியே கட்சியில் நிலவும் குழப்பத்துக்கு காரணம், சேலம் மாவட்டத்தில் அதிமுக-வினர் 99 சதவீதம் பேர் ஓ.பன்னீர்செல்வத் துக்கு ஆதரவாக இருக்கின்ற னர்’ என்று எஸ்.கே.செல்வம் கூறி னார்.

தற்போது, மாவட்டத்தில் அமைச் சர் மீது அதிருப்தியில் உள்ள அதிமுக-வினர் ஓ.பன்னீர்செல்வத் துக்கு ஆதரவாக எஸ்.கே.செல்வம் தலைமையில் அணி திரண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in