

ஆர்.கே.நகர் தொகுதியில் சென்னை மாநகராட்சி சார்பில் அடுத்த வாரம் அம்மா வாரச் சந்தை திறக்கப்பட உள்ளது. திறப்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் காய்கறிகள், தானிய வகைகள், மளிகைப் பொருட்கள், இறைச்சி மற்றும் கைவினை பொருட்கள் உள்ளிட்ட 1,256 வகையான பொருட்களை, இடைத்தரகர்களின் தலையீடு இல் லாமல், மிகக் குறைந்த விலை யில் வழங்குவதற்காக சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அம்மா வாரச்சந்தை தொடங்கப் படும் என்று மேயர் சைதை துரைசாமி கடந்த 2014 பட்ஜெட்டில் அறிவித்திருந்தார்.
அதன்படி மாநகராட்சி மேற் கொண்ட நடவடிக்கைகளின் அடிப் படையில், ஒவ்வொரு இடங்களில் வாரச் சந்தைகளை திறக்கும் வித மாக, ஜெயலலிதாவின் ஆர்.கே. நகர் தொகுதியில் உள்ள கொருக் குப்பேட்டை, அரும்பாக்கம், மின்ட், கோட்டூர்புரம், மெரினா கடற்கரை, அசோக்நகர், பழைய மகாபலிபுரம் சாலையில் மத்திய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப மையம் அருகில் ஆகிய 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன.
இதுதொடர்பான ஆலோச னைக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் மேயர் சைதை துரை சாமி, ஆணையர் தா.கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநகராட்சி செய்து தர வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சந் தையை திறக்க 7 இடங்கள் தேர்வு செய்யப்பட்டாலும், முதல்கட்ட மாக, மாநகராட்சியின் வடக்கு வட் டாரத்தில் முதல்வரின் ஆர்.கே.நகர் தொகுதியில் கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் அருகில், மத்திய வட்டாரத்தில் அசோக் நகர் 11-வது அவென்யூ, தெற்கு வட்டாரத்தில் பழைய மகாபலிபு ரம் சாலையில், மத்திய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப மையம் அருகில் ஆகிய 3 இடங்களில் திறப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பேசிய மேயர் சைதை துரைசாமி, அம்மா வாரச்சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மிகத் தரமானதாகவும், எடை சரியாகவும் இருக்க வேண் டும். மேலும் பொருட்களில் கலப் படம் இருக்கவே கூடாது என்றார்.
முதல் சந்தையை முதல்வரின் ஆர்.கே.நகரில் அடுத்த வாரம், 25-ம் தேதி வாக்கில் திறக்க திட்ட மிடப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.