

உலக சித்த மருத்துவ அறக்கட்டளை சார்பில் இரு நாட்கள் நடைபெறும் உலக சித்தர் மரபுத் திருவிழா சென்னையில் நாளை (ஆக. 13) தொடங்குகிறது.
இது தொடர்பாக அந்த அறக்கட்டளையின் தலைவர் செல்வசண்முகம் சென்னை யில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது:
இன்றைய நவீன வாழ்வி யல் சூழலால் மக்கள் தீராத நோய்களால் அவதிப்பட்டு வரு கின்றனர். இந்நோய்களுக்கு சிகிச்சை பெற தற்போது, மாற்று மருத்துவ முறை மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளை நோக்கி மக்கள் செல்லத் தொடங்கி யுள்ளனர். சீன பாரம்பரிய மருத்துவத்துக்கு நோபல் பரிசு கிடைத்திருப்பதே அதற்கு சான்று. தமிழ் மக்கள் பயன்படுத்தி வரும் சித்த மருத்துவம், பல நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும், பக்க விளைவற்ற மருத்துவ முறையாகும்.
சித்த மருத்துவத்தை நவீன ஆய்வுகளின் அடிப்படையில் உலக மக்களை ஏற்றுக்கொள்ள செய்வதற்காக ‘உலக சித்த மருத்துவ அறக்கட்டளை’ கடந்த ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் சார்பில், ‘உலக சித்தர் மரபுத் திருவிழா’, சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாளை (ஆக.13) தொடங்கு கிறது. சனி, ஞாயிறு இரு நாட்களும் காலை 9 முதல் இரவு 9 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதில் அரசு சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதா கிருஷ்ணன், இந்திய மருத் துவத்துறை ஆணையர் மோகன் பியாரே, பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் உள்ளிட்டோர் பங்கேற் கின்றனர்.
இவ்விழாவில் சித்த மருத் துவ முகாம்கள், மூலிகை கண்காட்சி, மரபு விதைகள் கண்காட்சி, கல்லூரி மாணவர் களின் மரபுக் கலை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச் சிகள் நடைபெறும். விழாவில் காலை, பிற்பகல், மாலை வேளைகளில் பாரம்பரிய உணவு வகைகள் கிடைக்கும்.
நாளை தொடக்க நிகழ்ச்சிகளுக்கு பிறகு, பகல் 12 முதல் 1.30 வரை வீட்டு மருத்துவம் என்ற தலைப்பிலும், பிற்பகல் 2 முதல் 3.30 வரை சித்த மருத்துவத்தில் மனநலம், மாலை 3.30 முதல் 5 மணி வரை மகளிர் மருத்துவம் என்ற தலைப்புகளில் கருத்தரங் கங்கள் நடைபெற உள்ளன. மாலை 5 மணிக்கு மேல் திறந்தவெளி கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மேலும் குழந்தைகள் செயல் திறன் வளர்ச்சி, மரபு விளை யாட்டு, மரபு உணவு- நெருப் பில்லா உணவு தயாரிக்கும் முறைகள் ஆகிய பயிலரங் கங்களும் நடைபெறும்.
ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் 11 மணி வரை மரபு உணவு என்ற தலைப்பிலும், 11 முதல் பிற்பகல் 1.30 வரை தொற்றா நோய்கள் என்ற தலைப்பிலும், பிற்பகல் 2 முதல் 3.30 வரை குழந்தைகள் மருத்துவம் என்ற தலைப்பிலும், மாலை 3.30 முதல் 5.30 வரை சித்தர் கலை என்ற தலைப்பிலும் கருத்தரங்கங்கள் நடைபெறும்.
மேலும், யோகா, சித்த மருத்துவ மேம்பாடு, மரபு வேளாண்மை, தொழில் முனைவோருக்கான பயிற்சி உள்ளிட்ட பயிலரங்கங்களும் நடைபெறும். மாலை 6 மணிக்கு நிறைவு விழா நடைபெறுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.