

குருப் பெயர்ச்சியை முன்னிட்டு, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தஷ்ணாமூர்த்தி சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் பெயரை மாற்றி தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்யக் கோருவது வரவேற்கத்தக்கது. தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க பாஜக சார்பில் பயிற்சி முகாம் நடத்தப்படும். மோடியின் ‘மனதோடு பேசுகிறேன்’ என்ற திட்டம் தாய்மார்களின் பாதுகாப்புக்கான திட்டமாக இருக்கிறது.
அதிமுக எம்பி சசிகலா புஷ்பா பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது. ஆண், பெண் இருவரும் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். சசிகலா புஷ்பா தற்போது கட்சி தலைமை மீது குறை கூறுவது அவர்களது உட்கட்சி விவகாரம் என்றார்.