Published : 09 Oct 2014 10:30 AM
Last Updated : 09 Oct 2014 10:30 AM

வரைவு வாக்காளர் பட்டியல் அக்.15-ம் தேதி வெளியீடு: புதிதாக பெயரைச் சேர்க்க நவ.10 வரை அவகாசம்

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 15-ம் தேதி வெளியிடப்படுகிறது. பட்டியலில் புதிதாக பெயரைச் சேர்க்க விரும்புபவர்களுக்கு நவம்பர் 10ம் தேதி வரை அவகாசம் அளிக்கப் படவுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர், ஆண்டு முழுவதும் பெயர்களைச் சேர்க்க தேர்தல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

எனினும், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாத காலங்களுக்கு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறது. அப்போது, சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த வாக்காளர் மையங்களில் பெயர் பட்டியல் வெளியிடப்படும். அதைப் பார்த்துவிட்டு, அதில் திருத்தங்கள் மேற்கொள்ள விரும்புவோர், அதற்காக மனு செய்யலாம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வாக்காளர் வரைவு பட்டியல், வரும் 15-ம் தேதி வெளியாகவுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:

சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ளன. இப்பகுதியில் 2015-ம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இச்சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 15-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அன்று முதல் அந்தந்த வாக்குச் சாவடி மையங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். இதன்மூலம் பொதுமக்கள் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம்.

புதிதாக பெயர் சேர்க்க உள்ளவர் கள், படிவம் 6-ஐ நிரப்பி, வயது மற்றும் இருப்பிடச் சான்று களுடன் அந்தந்த வாக்குச் சாவடி மையங்களில் விண்ணப் பிக்கலாம். வாக்காளர் பட்டிய லில் திருத்தம் செய்ய வேண்டியி ருப்பின் படிவம் 8-ஐயும், சட்டப் பேரவைத் தொகுதிக்குள் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் படிவம் 8ஏ-ஐயும் நிரப்பி விண்ணப்பிக்கலாம்.

இப்பணி அக்டோபர் 15 முதல் நவம்பர் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் ஞாயிற்றுக் கிழமைகளான அக்டோபர் 19 மற்றும் நவம்பர் 2 ஆகிய இரு நாள்களில் அந்தந்த வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

ஆன்லைனில் மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்களை www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் மேற்கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x