

விளம்பர பதாகை வைப்பதில் ஓபிஎஸ், சசிகலா ஆதரவாளர் களிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினரும் பரஸ்பரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆயிரம் விளக்கு பகுதியில் உண்ணாவிரதம் தொடர்பாக விளம்பர பதாகைகள் வைத்திருந்தனர். இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், இரு தரப்பின ரிடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் பரஸ்பரம் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. விளம் பர பதாகைகளும் கிழிக்கப்பட்டன. இது தொடர்பாக இரு தரப்பினரும் ஆயிரம் விளக்கு காவல் நிலை யத்தில் புகார் தெரிவித்தனர்.