

பொதிகை தொலைக்காட்சியில் ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 9.30 மணிக்கு இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றிய ‘குறை யொன்றுமில்லை’ என்ற வரலாற்றுத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ‘தி இந்து’வுடன் இணைந்து பொதிகை தொலைக்காட்சி இந்நிகழ்ச்சியை வழங்கி வருகிறது.
52-வது அத்தியாயமாக இன்று இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூறாவது பிறந்த தினத்தை ஒட்டி அமைவதால் நூற்றாண்டு விழா சிறப்பு தொகுப்பாக அமைய வுள்ளது. அவரது இசைப்பயணத் தில் மைல் கல்லாக இருந்த சில சபா செயலர்களின் சுவையான நினைவுகளுடன், பல்துறை கலை ஞர்களின் பங்களிப்பும், புகைப் படத் தொகுப்பும், அரிய கானங் களும் இந்நிகழ்ச்சியில் இடம் பெறும். மேலும் எம்.எஸ்.சுப்பு லட்சுமியின் இசை எப்படி சமு தாயத்துக்கு உதவிகரமாக விளங் கியது என்பதை விளக்கும் நிகழ்ச்சியாகவும் இது அமையும்.
1960 களில் வாலாஜாபேட்டை யில் உள்ள ஆதரவற்ற சிறுவர் களுக்கான ‘தீன பந்து’ ஆசிரமத் துக்கு அவர் சென்று அங்குள்ள குழந்தைகளுக்காக பாடியது பற்றியும், திருநெல்வேலியில் உள்ள மதுரை திரவியம் தாயு மானவர் இந்து கல்லூரியில் வணிகவியலில் முதுநிலை பட்டப் படிப்பு எம்.காம் நிறுவ நிதி உதவிக் கச்சேரி செய்தது பற்றியும் சில சுவாரஸ்யமான தகவல்கள் இடம் பெறும். இதன் மறுஒளிபரப்பை செவ் வாய்க்கிழமை இரவு 9.30 மணிக்கு காணலாம்.