கூட்ட நெரிசலைக் குறைக்க தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: இன்று முதல் முன்பதிவு

கூட்ட நெரிசலைக் குறைக்க தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு: இன்று முதல் முன்பதிவு
Updated on
2 min read

தீபாவளி கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை, ஈரோட்டுக்கு சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில்களும், பிரீமியம் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில்களும் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி

திருநெல்வேலி சென்னை எழும்பூர் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 06012 விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி வழியாக) திருநெல்வேலியில் இருந்து வரும் 21-ம் தேதி மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

நாகர்கோவில் சென்னை எழும்பூர் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 06352 - விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி வழியாக) நாகர்கோவிலில் இருந்து 20-ம் தேதி மாலை 5.05 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 6.15 மணிக்கு சென்னை வந்தடையும்.

நாகர்கோவில்

சென்னை எழும்பூர் நாகர் கோவில் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 06351 - விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி வழியாக) சென்னையில் இருந்து 24-ம் தேதி பகல் 3 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு நாகர்கோவில் போய்ச்சேரும்.

சென்னை எழும்பூர் திருநெல்வேலி சிறப்பு ரயில் (எண்: 06745 சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி வழியாக) சென்னையில் இருந்து 27-ம் தேதி இரவு 10.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலி போய்ச்சேரும்.

இன்றுமுதல் முன்பதிவு

ஈரோடு சென்னை சென்ட்ரல் சூப்பர்பாஸ்ட் பகல்நேர சிறப்பு ரயில் (எண்: 06606) ஈரோட்டில் இருந்து 20-ம் தேதி பகல் 1.45 மணிக்குப் புறப்பட்டு, அன்றிரவு இரவு 8.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

கோவை சென்னை சென்ட்ரல் சூப்பர்பாஸ்ட் பகல்நேர சிறப்பு ரயில் (எண்: 06608) கோயம்புத் தூரில் இருந்து 21-ம் தேதி காலை 9.20 மணிக்குப் புறப்பட்டு, அன்று மாலை 5.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

மேற்கண்ட சிறப்பு ரயில்களுக் கான முன்பதிவு இன்று (அக்டோபர் 5) தொடங்குகிறது.

பிரீமியம் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில்கள்

சென்னை எழும்பூர் திருநெல் வேலி பிரீமியம் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 00609 - விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி வழியாக) சென்னையில் இருந்து 20-ம் தேதி இரவு 9.05-க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.15 மணிக்கு திருநெல்வேலி போய்ச்சேரும். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.

சென்னை எழும்பூர் நாகர்கோவில் பிரீமியம் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 00611 - விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி வழியாக) சென்னையில் இருந்து 21-ம் தேதி பகல் 3 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு நாகர்கோவில் போய்ச் சேரும். இந்த ரயிலுக்கான முன்பதிவு 6-ம் தேதி (நாளை) தொடங்குகிறது.

சென்னை எழும்பூர்

நாகர்கோவில் சென்னை எழும்பூர் பிரீமியம் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 00632 - விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி வழியாக) நாகர்கோவிலில் இருந்து 23-ம் தேதி மாலை 5.05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.05 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு 8-ம் தேதி தொடங்கும்.

திருநெல்வேலி சென்னை எழும்பூர் பிரீமியம் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 00672 திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம் வழியாக) 26-ம் தேதி மாலை 6.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை வந்தடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு 11-ம் தேதி தொடங்கும்.

கோவைக்கு..

சென்னை சென்ட்ரல் கோவை பிரீமியம் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 00605) சென்னையில் இருந்து 20-ம் தேதி இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.10 மணிக்கு கோவை சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கும்.

சென்னை சென்ட்ரல் கோவை பிரீமியம் சூப்பர்பாஸ்ட் சிறப்பு ரயில் (எண்: 00605) சென்னையில் இருந்து 21-ம் தேதி இரவு 9.50 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.10 மணிக்கு கோவை சென்றடையும். இதற்கான முன்பதிவு 6-ம் தேதி தொடங்கும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in