Published : 20 Jan 2017 08:44 AM
Last Updated : 20 Jan 2017 08:44 AM

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

அவசர சட்டத்தைப் பிறப்பித்து ஜல்லிக் கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால், அதற்காக அவசர சட்டம் எதுவும் பிறப்பிக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் மத்திய அரசு அலட்சியத்துடன் நடந்து கொள்வதை பிரதமரின் பதில் உறுதி செய்திருக்கிறது. தமிழக அரசின் நடவடிக்கைகளைப் பொறுத்திருந்து பாருங்கள் என்று முதல்வர் கூறியிருக்கிறார். இந்த விஷயத்தில் தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? என்ன செய்ய முடியும்? என்பது தெரியவில்லை. ஜல்லிக்கட்டை உறுதி செய்யும் வகையில் அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது வரவேற்கத்தக்கதே. ஒருவேளை எதுவும் சாத்தியமில்லை என்றால் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்.

பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்:

தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்திருப்பது மத்திய, மாநில அரசுகளின் நடைமுறையில் ஓர் ஆரோக்கி யமான அணுகுமுறை. முதல்வர் உடனே அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி ஒட்டுமொத்த அரசியல் தலைவர்களின் கருத்துகளையும் கேட்டு, வருங்கால நடவடிக்கையை எடுக்க வேண்டும். போராட்டங்கள் விடைபெறும் அளவுக்கு நல்லதே நடைபெறும் என்று உறுதியாக நம்பலாம்.

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர்:

ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் நடத்திவரும் அறப் போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாஜக அரசு ஏதோ ஒரு நிர்பந்தத்தின் காரணமாக ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு தீர்வு காண தயாராக இல்லை. மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தரும் வகையில் தமிழக காங்கிரஸ் சார்பில் 20-ம் தேதி (இன்று) சென்னையில் நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்ட பேரணி ரத்து செய்யப்படுகிறது.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:

தமிழக முதல்வர் டெல்லிக் குச் சென்று பிரதமரை சந்தித்து ஜல்லிக் கட்டு வீர விளையாட்டை உறுதி செய்வதற் கான நிலையை ஏற்படுத்தக்கூடிய முடிவை எடுத்திருக்கிறார். இனிவரும் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு தங்கு தடையின்றி தொடர்ந்து நடைபெறும் என்ற செய்தி வரும் என்று நம்புவோம். இதற்கு மாணவர்கள், இளைஞர்கள் போன்றோர்களின் போராட்டம் அடித்தளமாக அமைந்திருக்கிறது.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார்:

ஜல்லிக்கட்டுக்கு உடனடி யாக அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும். அப்படி இல்லை யென்றால், உணர்வுக்கு மதிப்பளித்து ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அதிரடி அனுமதியை அளிக்க வேண்டும். விளைவு எது வாக இருந்தாலும் தமிழக மக்கள் உங்கள் பின்னால் போராட தயாராக இருக்கிறார்கள்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி:

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக மாணவர்கள் தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர். ஜல்லிக்கட்டு நடப்பதற்கும், நடக்காததற்கும் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டியது பாஜக அரசுதான். இனிமேல் உச்ச நீதிமன்ற தீர்ப்பை புறக்கணிக்கும் கர்நாடகாவை தமிழகம் பின்பற்ற வேண்டும்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு அறவழி போராட்டம் நடத்தும் மாணவர்களிடம் காவல்துறை கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். தடியடியில் காயம டைந்தவர்களிடம் வருத்தம் தெரிவிப்ப தோடு, கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

இதைத் தவிர பல்வேறு கட்சிகள், அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x