

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், பொது மக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதைக் கண்டித்து மக்கள் நலக் கூட்டியக்கம் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டுக்காக பிறப்பிக்கப் பட்ட அவரச சட்டம் குறித்து போராட் டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு அரசு தெளிவுபடுத்தியிருக்க வேண் டும். குடியரசு நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒத்திகைக்காக அந்தச் சாலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருந்தது. எனவேதான் அரசும், போலீஸும் திட்டமிட்டே வன் முறையை கட்டவிழ்த்துவிட்டன.
சென்னை வன்முறையின்போது கைது செய்யப்பட்ட அனைவரை யும் விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். வன் முறையில் ஈடுபட்ட போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை வன்முறை யைக் கண்டித்தும், அதுகுறித்து நீதி விசாரணை நடத்த வலியுறுத் தியும் மக்கள் நலக் கூட்டியக்கம் சார்பில் ஜன.28-ம் தேதி (நாளை) சென்னை, மதுரை, கோவை ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
அதேபோல, தமிழகத்தில் நிக ழும் சாதிய வன்கொடுமைகளைக் கண்டித்து பிப்.2-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தமிழக அரசின் நடவடிக்கைகளில் மத்திய அரசின் தலையீடு இருக்கிறது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன, இந்தப் போக்கு ஜனநாயகத்துக்கு எதிரானது என்றார்.