Published : 19 Apr 2017 08:23 AM
Last Updated : 19 Apr 2017 08:23 AM

ஓபிஎஸ் எதிர்ப்பால் அதிமுக அணிகள் இணைவதில் சிக்கல்

ஒரு குடும்பத்திடம் கட்சியும், ஆட்சியும் செல்லக் கூடாது என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் தொடர் நிபந்தனையால் அதிமுகவின் இரு அணிகள் இணைப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ் தலைமையில் இரு அணிகள் செயல் பட்டு வருகின்றன. இதையடுத்து அதிமுக கட்சிப் பெயரையும் இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளது. இதற் கிடையே, ஆர்.கே.நகர் இடைத்தேர் தல் ரத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை, இரட்டை இலை சின் னத்தைப் பெற தினகரன் லஞ்சம் கொடுத்ததாக டெல்லி போலீஸார் வழக்கு பதிவு போன்ற பிரச்சினை களால் சசிகலா அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில், அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பலரும் இரு அணிகளும் இணைந்தால் மட்டுமே, கட்சியையும், ஆட்சியையும் தக்க வைக்க முடியும் என வலியுறுத்தி வருகின்றனர். அதற்கான ரகசிய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக வும் கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன் தினம் சென்னை விமான நிலை யத்தில் நிருபர்களிடம் பேசிய முன் னாள் முதல்வர் ஓபிஎஸ், ‘‘அதிமுக வின் இரு அணிகளும் இணைவது தொடர்பாக என்னை அணுகினால் பேசத் தயாராக உள்ளேன்’’ என்றார்.

அமைச்சர்கள் ஆலோசனை

தலைமைச் செயலகத்தில் முதல் வர் எடப்பாடி பழனிசாமியை சந் தித்து பேசிய மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரையிடம் இதுபற்றி கேட்டபோது, ‘‘ஓபிஎஸ் கருத்து வர வேற்கத்தக்கது’’ என்றார். அதன் பின், முதல்வர் எடப்பாடி பழனி சாமியுடன் மூத்த அமைச்சர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி னர். நேற்று முன்தினம் மாலை தலைமைச் செயலகம் வந்த தம்பிதுரை, முதல்வருடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறுபோது, ‘‘கட்சியில் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பது எனது வேண்டுகோள். கருத்து வேறுபாடுகளைக் களைய இனி நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியில் மூத்த அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் சேர்ந்து பேசுவார்கள்’’ என்றார்.

இதையடுத்து அன்றிரவே, அமைச்சர் பி.தங்கமணி தலைமை யில் 20 அமைச்சர்கள் கூடி ஆலோ சனை நடத்தினர். சசிகலாவை பார்ப்பதற்காக டிடிவி தினகரன் பெங்களூரு சென்றிருந்த நிலையில் இந்த ஆலோசனை நடந்தது குறிப்பிடத்தக்கது.

ஆலோசனை கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஜெயக்குமார், ‘‘ஓபிஎஸ் கருத்து வரவேற்கத்தக்கது. இணைவது குறித்து பேசி முடிவெடுக்கப்படும்’’ என்றார். அமைச்சர்கள் இவ்வாறு தொடர்ந்து கூறியதால், அதிமுக வின் இரு அணிகளும் உடனடியாக இணைப்புக்கான வாய்ப்புகள் பிரகாசமாக தெரிந்தது.

இதற்கிடையே, அதிமுக எம்எல் ஏக்கள் உடனடியாக சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். சென்னை யில் நிறுத்தப்பட்டுள்ள ஐஎன்ஸ் சென்னை போர்க் கப்பலை பார்ப்ப தற்காக அவர்கள் அழைக்கப்பட் டிருந்தாலும், அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக ஆலோசிக்கப்படலாம் என்றும் பேசப்பட்டது.

இந்நிலையில், நேற்று நிலைமை மாறியது. நேற்று காலை முதல் வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன், பின்னர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுடன் டிடிவி தினகரன் வீட்டுக்கு சென்றார். அங்கு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார். அதன்பின் செங்கோட்டையன் கூறும்போது, ‘‘எங்கள் குடும்பத் தில் உள்ள பிரச்சினையை பேச்சு வார்த்தை மூலம் சுமுகமாக தீர்த் துக்கொள்ள விரும்புகிறோம். அதற் காக குழு அமைக்க உள்ளோம். அதிமுக பொதுச்செயலாளர் பதவி யில் இருந்து சசிகலா விலகுவது தொடர்பாக பன்னீர்செல்வம் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை’’ என்றார். அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள் ளிட்டோரும், ‘‘ஓபிஎஸ் கருத்தை வரவேற்கிறோம். இரு அணிகளும் இணைவதையே தொண்டர்கள் விரும்புகின்றனர்’’ என்றார்.

ஆனால், பெரியகுளத்தில் நேற்று மதியம் நிருபர்களை சந் தித்த ஓ.பன்னீர்செல்வம், ‘‘நிபந் தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என நான் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. சசிகலா, தினகரன் குடும்பத்தின் செயல்பாடுகளை ஏற்க முடியாது. அந்தக் குடும்பத்தின் ஆதிக்கம் முற்றிலும் அகற்றப்பட வேண்டும். அப்போதுதான் இரு அணிகளும் இணையும் பேச்சுக்கு அர்த்தம் இருக்கும்’’ என்றார்.

கட்சிப் பதவிகளில் சசிகலாவும் தினகரனும் நீடிப்பார்கள் என அமைச்சர்கள் சிலர் பேசி வரும் நிலையில், ஓபிஎஸ்ஸின் இந்த நிபந்தனைகள், இரு அணிகள் இணைப்பில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், ‘‘ஓ.பன்னீர் செல்வத்தின் முடிவு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்’’ என அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

யார் அதிகாரம் அளித்தது?

அதே நேரத்தில், டிடிவி தினகரனை நேற்று சந்தித்துவிட்டு வந்த வெற்றிவேல் எம்எல்ஏ, ‘‘முதல்வர் பதவி மற்றும் 6 முக்கிய துறைகளை ஓபிஎஸ் கேட்கிறார். அதிமுக பொதுச்செயலாளர் சசி கலாதான். துணைப் பொதுச் செயலாளர் தினகரன்தான். தின கரன் இல்லாத நேரத்தில் கூட்டம் நடத்த அமைச்சர்களுக்கு யார் அதிகாரம் அளித்தது?’’ என்று கேள்வி எழுப்பினார்.

ஓபிஎஸ்ஸின் நிபந்தனை, வெற்றி வேலின் பதிலடி என இரு தரப் பிலும் கருத்து வேறுபாடுகள் தொடர் வதால் அதிமுக அணிகள் இணைப் புக்கான வாய்ப்பு குறைத்துள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x