

அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக இன்றும் முத்தரப்பு பேச்சுவார்த்தையை தொடர தொழிற்சங்கங் களுக்கு தொழிலாளர் நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத் துக் கழகங்களில் பணியாற்றும் 1 லட்சத்து 43 ஆயிரம் ஊழியர் களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்குதல், போக்குவரத்து இழப்பை அரசு ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் குறித்து நிர்வாகத்துடன் தொழிற்சங்கத்தினர் நடத்திய 4 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலா ளர் நலத்துறை தனி ஆணையர் யாஸ்மின் பேகம் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நேற்று மதியம் 12 மணி அளவில் தொடங் கியது. இதில், நிர்வாகத் தரப்பில் மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் கிருஷ்ண மூர்த்தி, போக்குவரத்துத் துறை தனி அலுவலர் கோவிந்தராஜ் உட்பட 8 பேரும், தொழிற்சங் கங்கள் தரப்பில் மு.சண்முகம், கி.நடராஜன் (தொமுச), அ.சவுந்தர ராஜன் (சிஐடியு), ஜெ.லட்சுமணன் (ஏஐடியுசி) உட்பட 47 சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சுமார் ஆறரை மணி நேரம் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவு எட்டப்படவில்லை.
அரசு போக்குவரத்து அதிகாரிகள், தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் என தனித் தனியாக அழைத்து தொழிலாளர் நலத்துறை தனி ஆணையர் யாஸ்மின் பேகம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், இருதரப்பின ருடன் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு படிப்படி யாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும் என்றும் பொதுமக் களுக்கு ஏற்படும் பாதிப்பை தவிர்க்கும் வகையில் வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.