

அதிமுகவின் இரு அணிகளும் ஜூன் 16-ம் தேதிக்குள் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய லாம் என தேர்தல் ஆணையம் கால அவகாசம் வழங்கியுள்ளது.
அதிமுகவில், பொதுச்செயலா ளராக சசிகலா தேர்வு செய்தது செல் லாது என தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு புகார் அளித்தது. இதையடுத்து, இரு தரப்பிலிருந்தும் தேர்தல் ஆணையம் 3 முறை விளக்கம் கோரியது.
இதற்கிடையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தால், இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த மார்ச் 22-ம் தேதி சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம், இரு தரப்பையும் ஏப்ரல் 17-ம் தேதிக்குள் கட்சியில் உள்ள ஆதரவு தொடர்பான கூடுதல் ஆவணங்களை அளிக்க உத்தரவிட்டது.
இதற்கிடையில், ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஏப்ரல் 17-ம் தேதி ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில், அதிமுக அம்மா கட்சி சார்பில், 8 வாரம் அவகாசம் கோரி தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது.
அது தொடர்பான முடிவை தேர்தல் ஆணையம் உடனடியாக அறிவிக்கவில்லை. அதன்பின், ஏப்ரல் 17-ம் தேதி இரு தரப்பினரும் ஆஜராகினர். அப்போது, சசிகலா தரப்பு, அவகாசம் கோரியுள்ளதாக தெரிவித்தது. ஆனால், ஓபிஎஸ் தரப்பு 9 ஆயிரத்து 110 பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தது. பொதுச் செயலாளர் பதவி தொடர்பான முடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று புதிய மனுவையும் அளித்தது.
இந்நிலையில், நேற்று இருதரப் பும் கூடுதல் ஆவணங்களை சமர்ப் பிக்கக் கால அவகாசத்தை நீட்டிக்க ஆணையம் முடிவெடுத்திருப்ப தாகவும், வரும் ஜூன் 16-ம் தேதிக் குள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணை யம் உத்தரவிட்டுள்ளது.
அதே நேரம், இதில் இறுதி முடிவு எடுக்கப்படும்வரை, இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்து கடந்த மார்ச் 22-ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவு அமலில் இருக்கும் என்றும் தெரிவித் துள்ளது.