

சென்னை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர் களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப் படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவு பணி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் 10-ம் வகுப்பு கல்வித்தகுதியை பதிவுசெய்த வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றுடன் பள்ளிக்கு வரவேண்டும். 10-ம் வகுப்பு கல்வித் தகுதியை பதிவு செய்தவர்கள் பதிவு எண் தெரியாவிட்டால் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ள வேண்டும்.
பதிவு முகாம் ஜுன் 20-ம் தேதி முதல் ஜூலை 4-ம் தேதி வரை பள்ளிகளில் நடைபெறும். மதிப்பெண் சான்றிதழ் வழங்க தொடங்கிய முதல் நாளே அனைவருக்கும் பதிவுமூப்பு தேதி யாக (சீனியாரிட்டி) வழங்கப்படும். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைத்து மாண வர்களும் இந்த வசதியை பயன்படுத் திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.
மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணைய தளம் (www.tnvelaivaaippu.gov.in) வழி யாகவும் கல்வித் தகுதியை பதிவுசெய்து கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் கூறியுள்ளார்.