ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை: ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தகவல்

ஜல்லிக்கட்டு வன்முறை தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை: ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தகவல்
Updated on
1 min read

சென்னை, கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட ஊர்களில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது வன்முறை யால் பாதிக்கப்பட்டவர்கள் மற் றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் நடை பெற்ற கோவை வ.உ.சி. மைதானத் தில் நேற்று ஆய்வு மேற்கொண்ட அவர், செய்தியாளர்களிடம் கூறிய தாவது: ஜல்லிக்கட்டு போராட்டத் தின்போது (ஜன. 23-ம் தேதி) நடைபெற்ற வன்முறை தொடர்பாக விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க அரசு என்னை நிய மித்துள்ளது. முதல்கட்டமாக, பிரச்சினைகள் நிகழ்ந்த இடத்தை மட்டும் பார்வையிட்டு, காவல் துறை தரப்பு தகவல்களைக் கேட்டு வருகிறேன்.

ஏற்கெனவே, சென்னையில் பிரச்சினை நடைபெற்ற மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்டுள்ளேன். தற்போது, கோவை, சேலத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர், மதுரையில் ஆய்வு நடத்த உள்ளேன்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட வர்கள், பொதுமக்கள் மற்றும் பத்திரிகையாளர்களிடம் விசா ரணை நடத்த உள்ளேன். இதற் காக, சென்னையில் விசாரணை அரங்கம் அமைக்கப்பட்டு வருகி றது. இன்னும் 15 நாட்களில் நேரடி விசாரணையைத் தொடங்குவேன்.

சென்னையில் விசாரணை முடிந்த பிறகு, கோவை, சேலம், மதுரை ஆகிய ஊர்களில் விசா ரணை நடத்தப்படும். நாளிதழ்களில் விளம்பரம் செய்து நடத்தப்படும் விசாரணையின்போது, பொது மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட வர்கள் தயக்கமின்றியும், அச்ச மின்றியும் தங்கள் தரப்பு புகார்கள், கருத்துகளைத் தெரிவிக்கலாம். இந்த விசாரணை பாரபட்சமின்றி யும், நேர்மையாகவும், நியாயமாக வும் நடத்தப்படும் என்றார்.

சேலத்தில் ஆய்வுக்குப் பின்னர் நீதிபதி ராஜேஸ்வரன் கூறும்போது, “சேலத்தில் 5 நாட்களாக ரயிலைச் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடத்திய தாக்குதலில் ரயிலில் ஏற்பட்ட சேதம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளபடும். ரயில் சிறை பிடிக்கப்பட்டபோது மின்சாரம் தாக்கி இளைஞர் பலியானது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படும்” என்றார்.

ரூ.85.34 லட்சம் சேதம்

ஜல்லிக்கட்டு போராட்டத் தின்போது சிறைபிடிக்கப்பட்ட பெங்களூரு - காரைக்கால் ரயி லுக்கு ஏற்பட்ட சேத விவரம் குறித்து சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையர் அலுவலகம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் வழங்கியது.

இதில், ரயிலில் மின்சாரப் பொருட்கள் சேதம் ரூ.46,455, இருப்புப் பாதை சேதம் ரூ.50,508, இன்ஜினில் ஏற்பட்ட சேதம் ரூ.68,20,805, ரயில் இயக்கப்பட முடியாததால் ஏற்பட்ட வருவாய் இழப்பு ரூ.16,16,833 என மொத்தம் ரூ.85,34,601 சேதம் ஏற்பட்டுள்ளது என அறிக்கை வழங்கப்பட்டது. இந்த அறிக்கை விசாரணை கமிஷ னிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in