

தமிழ்நாட்டின் பெருமைகளையும், தொன்மையான தமிழ் மொழியின் சிறப்பையும் எடுத்துக்கூறும் லட்சக் கணக்கான நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழின் சிறப்பை உலகுக்கு பறைசாற்றும் வகையில், ‘இலக் கியத்தில் ஒரு நாள் மதுரை’ என்ற பெயரில் ஆவணப் படம் ஒன்றைத் தயாரித்து வருகிறார் மதுரை பசுமலையைச் சேர்ந்த தொன்மை தரிசனக் கூடத்தின் நிறுவனர் தேவராஜ் அதிசயராஜ்.
இவர் தமிழ் ஆசிரியராகப் பணி புரிந்து ஓய்வுபெற்றவர். இதுவரை 18 புத்தகங்களை எழுதியுள்ளார். ‘உப்பு சத்தியாக்கிரக வீர வரலாறு’ என்ற நூலுக்காக மறைந்த குடி யரசுத் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் கடிதம் அனுப்பி பாராட்டி னார். கடந்த 4 ஆண்டுகளாக ஆவணப்படம் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஆவணப்படத்தின் முதல் 2 பாகங்கள் முடிந்துள்ள நிலை யில், மதுரையில் முன்னோட்ட வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதுகுறித்து தேவ ராஜ் அதிசயராஜ் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
முழுக்க முழுக்க வரைகலை (அனிமேஷன்) தொழில்நுட்பத்தில் 90 நிமிடங்கள் ஓடும் ஆவணப்படம் சென்னையில் தயாராகி வருகி றது. இப்படத்தில் எனது மாண வர்களும் திரைப்பட ஒளிப்பதி வாளர்களாகப் பணிபுரிந்து வரும் வே.இளையராஜா, ஜெ.ஜெயப் பிரகாஷ் ஆகியோர் இயக்குநர், இணை இயக்குநர்களாக பணி புரிகின்றனர்.
தமிழ் இலக்கியங்களில் குமரி கண்டம் என்றழைக்கும் லெமூரியா கண்டத்தில் முதல் தமிழ்ச் சங்கம் அமைந்தது, முதல் இடைச்சங்கம், கடைச்சங்கம் போற்றி வளர்த்தது வரை அனைவருக்கும் புரியும்படி யாக படத்தில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. தமிழ்நாட்டை முன் னோர்கள் என்னென்ன பெயர்களில் அழைத்தனர், வெளிநாட்டினர் எவ் வாறு அழைத்தனர், கல்வெட்டில் என்னென்ன பெயர்களில் அழைக் கப்பட்டது என்ற செய்திகளும் இடம்பெற்றுள்ளன.
உலக வரைபடத்தில் தமிழ்நாடு இடம் பெற்றது தொடர்பான வரலாற்றுச் செய்திகள், மதுரையின் வரலாறு, இலக்கியங்களிலும், வரலாற்றிலும் மதுரைக்குக் கிடைத்த பெருமைகள், மதுரையின் தனிச்சிறப்புகள் ஆகியவையும் விளக்கப்பட்டுள்ளன.
தமிழ் வளர்த்த தமிழ்ச் சங்கங்களின் பணிகள், திரு வள்ளுவர் திருக்குறள் அரங் கேற்றம் செய்தபோது மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் வான் புகழ் வள்ளுவருக்குச் செய்த சிறப்பு கள் அழகாக படம் பிடிக்கப் பட்டுள்ளன.
சங்க இலக்கியங்களில் மதுரை நகரத்தைப் பற்றியே அதிகம் பேசப் பட்டுள்ளது. இம்மாநகர மக்களின் வாழ்வை எடுத்துச் சொல்வதன் மூலம் சங்க காலத் தமிழர்களின் வாழ்வியல் முறைகளைச் சொல்லி விடலாம். அந்த வகையில் சங்க காலத்தில் பாண்டிய நாட்டின் தலைநகர் மதுரையில் அரசன், அரசியர், காவலர், வணிகர், பாமரர் ஆகியோரின் ஒருநாள் வாழ்க்கை தினமும் எவ்வாறு கழிந்தது என்பதை இப்படம் விளக்குகிறது. குழந்தைகளுக்கும், இளைய தலை முறையினருக்கும் பழந்தமிழர் களின் கலை, பண்பாடு, கலாச் சாரத்தை மிக எளிமையாகக் கற்றுக் கொடுக்கும் வகையில் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அதிக பொருட்செலவில் தயாரிக் கப்பட்டு வரும் இப்படம் 3 மாதங் களில் முடிவடைந்து உலகம் முழு வதும் திரையிடப்படும் என இயக்கு நர் ஜெ.ஜெயபிரகாஷ் கூறினார்