

வெள்ளகோவில் அருகே கார் மோதிய விபத்தில், சாலை யோரம் அமர்ந்திருந்த 3 தொழி லாளர்கள் நேற்று பலியாகினர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: திருப்பூர் மாவட் டம் வெள்ளகோவில் அருகே முத்தூர் - காங்கயம் சாலை யில் மேட்டாங்காட்டு வலசில் மதுக்கடை உள்ளது. எருக் கலாங்காட்டு வலசைச் சேர்ந்த நடராஜ் (50), கரை வலசைச் சேர்ந்த மாரிமுத்து(60), வரட்டுக் கரையைச் சேர்ந்த கருப்ப ணன்(60) ஆகியோர் அங்கே உள்ள மரத்தடியில் அமர்ந்திருந் தனர். 3 பேரும் தென்னை மரம் ஏறும் தொழிலாளர்கள்.
அவ்வழியாக நேற்று மதியம் வந்த கார், முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க முயற்சித்த போது கட்டுப்பாட்டை இழந்து மரத்தடி அருகே அமர்ந்திருந்த நடராஜ், மாரிமுத்து, கருப்பணன் ஆகியோர் மீது ஏறியது. இதில், 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 2 பேர் காயமடைந்தனர். கார் ஓட்டுநர் தலைமறைவாகிவிட்டார்.