

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் உள்ளது. பலத்த பாதுகாப்பு நிறைந்த இந்த எஸ்டேட்டில் கடந்த 24-ம் தேதி அதிகாலை காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டு, கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் மற்றொரு காவலாளியான கிருஷ்ண பகதூர் காயமடைந்தார்.
இது தொடர்பாக கோத்தகிரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாவட்ட எஸ்பி முரளிரம்பா தலைமையில் 5 டிஎஸ்பிக்கள் அடங்கிய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
கொலையான ஓம் பகதூர், காய மடைந்த கிருஷ்ண பகதூர் ஆகி யோரின் செல்போன்கள் மாயமா கின. இந்த செல்போன்களை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு ஒரு செல்போன் கிடைத்துள்ளது. அந்த செல்போனை போலீஸார் பரிசோதித்து வருகின்றனர்.
இந்நிலையில், காயமடைந்த கிருஷ்ண பகதூர் மீது போலீ ஸாருக்கு சந்தேகம் இருந்ததால், அவரை தங்கள் விசாரணை வளையத்தினுள் கொண்டுவந்து தொடர்ந்து விசாரித்து வருகின் றனர். ஓம் பகதூர் மற்றும் கிருஷ்ண பகதூர் இடையே முன் விரோதம் இருந்துள்ளது என்றும், இதனால், ஓம் பகதூரை கொலை செய்து, கொள்ளை நாடகத்தை கிருஷ்ண பகதூர் நடத்தியிருக்கலாம் எனவும் போலீஸார் நம்புவதால், அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
மேலும், கோடநாடு எஸ்டேட் டுக்கு வாகனங்கள் வந்துள்ள னவா என்பது குறித்து கோடநாடு, டானிங்டன் பகுதியில் உள்ள கண் காணிப்பு கேமராக்களை போலீ ஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கோடநாடு எஸ்டேட்டில் விசா ரணை நடந்து வருவதால், அப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதி கரிக்கப்பட்டுள்ளது. கோடநாடு காட்சிமுனைக்குச் செல்லும் தனி யார் வாகனங்கள் கடும் சோத னைக்குப் பின்னரே அனுமதிக் கப்படுகின்றன. இந்நிலையில், கோடநாடு எஸ்டேட்டை அடுத்து, வார்விக் பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் போலீஸார் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, அந்த எஸ்டேட்டில் குல்லா, கையுறை மற்றும் வாகன நம்பர் பிளேட் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை கொள்ளையர்கள் பயன்படுத்தியவையா என ஆய்வு செய்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.