கோடை விழா நிறைவு நாளில் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்: பல்வேறு போட்டிகளில் பங்கேற்று மகிழ்ச்சி

கோடை விழா நிறைவு நாளில் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்: பல்வேறு போட்டிகளில் பங்கேற்று மகிழ்ச்சி
Updated on
1 min read

ஏற்காடு கோடை விழா நிறைவு நாளான நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். பல்வேறு துறைகள் சார்பில் நடந்த போட்டிகளில் பயணிகள் ஆர் வத்துடன் பங்கேற்று மகிழ்ந்தனர்.

ஏற்காட்டில் 41-வது கோடை விழா மலர் கண்காட்சி நேற்று முன்தினம் (25-ம் தேதி) தொடங் கியது. நிறைவு நாளான நேற்று (ஞாயிறு) விடுமுறை தினம் என்பதால், கோடை விழாவுக்கு சேலம் மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந் தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

சுற்றுலா பயணிகள் மலர் கண்காட்சி, பழக் கண்காட்சி, காய்கறி கண்காட்சி ஆகியவற்றை ஆர்வத்துடன் கண்டு ரசித்ததுடன், பெரும்பாலானவர்கள் மலர் சிற்பங்கள், பழ உருவங்கள் அருகே நின்று செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய சுற்றுலா பய ணிகள் அதிக ஆர்வம் காட்டினர்.

இதேபோல் ஜென்ஸ் சீட், லேடீஸ் சீட், பக்கோடா பாயின்ட் ஆகிய இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கோடை விழா நிறைவையொட்டி பயணிகளுக்கு, குழந்தைகளுக்கான போட்டி, கோலப்போட்டி, பாரம்பரிய சமை யல் போட்டி, கால்நடை பராமரிப் புத்துறை சார்பில் நாய்கள் போட்டி உள்ளிட்டவை நடைபெற்றன.

நாய்கள் சாகசங்கள்

நாய்கள் போட்டியில் அல்ஷேசன், பொமரேனியன், ஜெர்மன் ஷெப்பர்டு, டாபர்மேன், லேபரடார், பாக்சர், டேசன்ட், கிரேடன், ராட்வீலர், பெல்ஜியம் ஷெப்பர்டு, டெர்ரியர், டால் மேஷன் ஆகிய வெளிநாட்டு இன நாய்களும், உள்நாட்டு இன நாய்களும் பங்கேற்றன. நாய்கள் செய்த சாகசங்கள் பார்வையாளர்களை ஈர்த்தன.

குறிப்பாக, காவல்துறைக்கு சொந்தமான நாய்கள் வெடிகுண்டு கண்டுபிடித்தல், உயரமான வளை யத்தினுள் தாவிக்குதித்தல், பிறர் கொடுத்த உணவுப் பொருளை சாப் பிட மறுத்து முகத்தை திருப்பிக் கொண்டது என வளர்ப்பவர் உத்தரவுக்கு கட்டுப்பட்டு செயல் பட்டது பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.

போட்டிகளில் வென்றவர்கள்

மழலையருக்கான தளிர்நடை போட்டியில் ஏற்காடு பிரதிக்க்ஷா, தரிஷ், இனியா ஆகிய குழந்தைகளும், ஆரோக்கிய குழந்தைகளுக்கான போட்டியில் ஏற்காடு மஞ்சக்குட்டை ஜான் ரிஷா, சேலம் மனன், ஏற்காடு ராகவன் ஆகிய குழந்தைகள் முதல் மூன்று பரிசுகளை வென்றனர். தம்பதி படகு சவாரிப் போட்டியில் தருமபுரி சசிகுமார்-புனிதா தம்பதி முதல் பரிசை வென்றனர். நாய்கள் போட்டியில் சாம்பியன் பட்டத்தை சேலம் மாவட்ட காவல்துறையை சேர்ந்த லேப்ரடார், கிரேடன் வகை நாய்களில் சங்கர் (சேலம்), பெல்ஜியம் ஷெப்பர்டு வகையில் கிருஷ்ணகுமார் (சென்னிமலை), லேப்ரடார் வகையில் சேலம் சிறைத்துறை மற்றும் மாநகர காவல்துறையை சார்ந்த நாய்கள் பரிசுகளை வென்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in