Published : 27 Jul 2016 02:06 PM
Last Updated : 27 Jul 2016 02:06 PM

25 ஆயிரம் பேருக்கு 340 கழிப்பறைகள்தானா?- மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகள், மக்கள் அவதி

மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் நோயாளிகள், அவர்களை பார்க்க வரும் உறவினர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் உட்பட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வெறும் 340 கழிப்பறைகள் மட்டுமே உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.

அரசு ராஜாஜி மருத்துவ மனையில் 45 சிகிச்சைப் பிரிவுகள் செயல்படுகின்றன. ஒரு நாளைக்கு 2,800 உள் நோயாளிகள், 9 ஆயிரம் வெளிநோயாளிகள் சிகிச் சைக்கு வந்து செல்கின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலி யர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் நோயாளிகளின் உறவி னர்கள் பயன்பாட்டுக்கு போதிய கழிப்பறைகள், குளியல் அறைகள் மற்றும் ஓய்வு அறைகள் இல் லாமல், அவர்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளதாகப் புகார் எழுந் துள்ளது.

இதுதொடர்பாக, மதுரை சமூகச் செயற்பாட்டாளர் சி. ஆனந் தராஜ் கூறியதாவது:

ஒரு உள் நோயாளியின் பராமரி ப்புக்கு, அவர்களுடன் ஒன்று முதல் 2 உறவினர்கள் துணைக்கு வருகின்றனர். குழந்தை பிறந்தால், அவர்களை பார்க்கும் ஆர்வத்தில் 10 முதல் 20 உறவினர்கள் வரை வந்து செல்கின்றனர். ஒருவர் இறந்தால், 50 முதல் 100 பேர் வரை உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்து விடுகின்றனர். மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், மருத்துவ, செவிலிய மாணவ, மாணவிகள் உட்பட ஒரு நாளைக்கு 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். மருத்து வமனையில் மொத்தம் 349 கழிப்பறைகள், 203 குளியல் அறை கள் உள்ளன. இதில் 80 சதவீதம் வார்டுகளில் சிகிச்சை பெறும் உள் நோயாளிகள் பயன்பாட்டுக்கே உள்ளன. வெளி நோயாளிகள், உள்நோயாளிகளை பார்க்க வரும் பொதுமக்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பயன்பாட்டுக்கு வெறும் 11 கழிப்பறைகள் மட்டுமே உள்ளன.

வார்டுகள், மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் பல கழிப் பறைகள், தண்ணீர் இல்லாமல் பயன்படுத்த முடியவில்லை. 2004-ம் ஆண்டு 7 லட்சமாக இருந்த உள்நோயாளிகள் வருகை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து தற்போது 8.50 லட்சமாக அதிகரித்துள்ளது. ஆனால், அவர்களுக்கான கழிப்பறைகள், குளியல் அறைகள், குடிநீர் ஆதாரம் அதிகரிக்கப்படவில்லை. அதனால், மருத்துவமனைக்கு வருவோர் மருத்துவமனையைச் சுற்றியுள்ள தனியார் கழிப்பறைகள், குளியல் அறைகளில் பணம் கொடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அங்கு கூடுதல் கட்டணம் பெறப்படுவதால் பலர் மருத்துவமனை வளாகம், வெளிப்புறங்களை திறந்தவெளி கழிப்பறையாக்கும் அவலம் உள்ளது.

இதனால், மருத்து வமனை சுற்றுவட்டாரப் பகு தியில் சுகாதாரச் சீர்கேடு ஏற் பட்டுள்ளது. தற்போது தனி நபர் கழிப்பறை கட்ட மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய, மாநில அரசுகள், சுகா தாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அரசு மருத் துவமனையில் கழிப்பறைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. நோயாளிகள், பணி யாளர்கள் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு, கழிப்பறைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து மருத்துவமனை டீன் எம்.ஆர். வைரமுத்து ராஜூ விடம் கேட்டபோது, புதிய கழிப் பறைகளை கட்ட இடங்களை தேர்வுசெய்து பொதுப்பணித் துறையிடம் கொடுத்துள்ளோம். போதிய பொதுப்பணித் துறை ஊழியர்கள் இல்லை. அதனால் பணிகளை உடனடியாகத் தொடங்க முடியவில்லை. மொத்த மருத்துவமனையும் 17 ஏக்கரில் உள்ளது. இவ்வளவு இடத்துக்குள் எத்தனை கட்டிடங்கள் கட்டுவது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x