

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களை போல ராஜஸ்தான் மாநி லத்திலும் மலிவு விலை உணவகங்களை அமைப்பதற்கு ராஜஸ்தான் அரசு அதிகாரிகள் திங்கள்கிழமை சென்னைக்கு வந்து அம்மா உணவகங்களின் செயல்பாடுகளை பார்வையிட்டனர்.
சென்னை மாநகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் 201 அம்மா உண வகங்களுக்கும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அம்மா உணவகங்கள் போல், ராஜஸ்தான் மாநிலத்திலும் மலிவு விலை உணவகங்களை அமைக்க, அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. அது தொடர்பாக, ராஜஸ்தான் மாநில அரசின் உள்ளாட்சி துறையின் தலைமை பொறியாளர் கே. கே. சர்மா, ஜெய்ப்பூர் மாநகராட்சி வருவாய் அலுவலர் கார்னிசிங் ஆகியோர் திங்கள் கிழமை சென்னை வந்தனர்.
அவர்கள், சாந்தோம், சைதாப் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 6 அம்மா உணவகங்களை பார்வையிட்டனர்.
பிறகு, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து, அம்மா உணவகங்களின் செயல்பாடு குறித்து அறிந்து கொண்டதோடு, அம்மா உணவகங்களின் திட்ட அறிக்கைகளையும் அதிகாரிகளிடம் பெற்றுச் சென்றுள்ளனர்.
ராஜஸ்தான் மாநில உள்ளாட்சித் துறை தலைமைப் பொறியாளர் கே. கே. சர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
எங்கள் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் 33 இடங்களில் தனியார் அறக்கட்டளை ஒன்று, மாலை வேளைகளில், ரூ.5-க்கு சப்பாத்தி, பருப்பு, பாவுபாஜி ஆகியவைகளை வழங்கி வருகிறது.
தமிழகத்தில் உள்ள அம்மா உண வகங்கள் போல், மலிவு விலை உண வகங்களை ராஜஸ்தான் அரசு சார்பில் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி, முதல் கட்டமாக ஜெய்ப்பூரில் மலிவு விலை உணவகங்களை துவக்க உள்ளோம். பிறகு, அதன் செயல்பாடுகளுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் மலிவு விலை உணவகங்களை தொடங்க திட்டமிட்டுள்ளோம். அதற்காக, சென்னையில் உள்ள அம்மா உண வகங்களை பார்வையிட்டுள்ளோம் என்றார் அவர்.