நீரா பானத்தில் இருந்து தயாரிக்கப்படும் வெல்லம், கற்கண்டு, சாக்லெட் நீரிழிவு நோயாளிக்கும் ஏற்றது: பேரவையில் முதல்வர் பழனிசாமி தகவல்

நீரா பானத்தில் இருந்து தயாரிக்கப்படும் வெல்லம், கற்கண்டு, சாக்லெட் நீரிழிவு நோயாளிக்கும் ஏற்றது: பேரவையில் முதல்வர் பழனிசாமி தகவல்
Updated on
1 min read

நீரா பானத்தில் இருந்து தயாரிக்கப் படும் வெல்லம், கற்கண்டு, சாக்லெட் போன்றவை சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்ற உண வாகும் என்று பேரவையில் முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் பொள்ளாச்சி ஜெயராமன் பேசும்போது, தென்னையில் இருந்து நீரா பானம் எடுத்து விற்பனை செய்ய அனுமதி அளித்திருப்பதற்கு தென்னை விவசாயிகள் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

அப்போது காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசும்போது, “நீரா பானம் சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்” என்று கேள்வி எழுப்பினார்.

முதல்வர் கே.பழனிசாமி குறுக் கிட்டுப் பேசுகையில், “நீரா பானம் ஒரு சத்தான உணவு. அதில் பல விட்டமின்கள் உள்ளன. நீரா பானம் இறக்கி விற்பதற்கு அனுமதித்ததால் விவசாயி களுக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். நீரா பானத்தில் இருந்து தயாரிக்கப்படும் வெல்லம், கற்கண்டு, சாக்லெட் போன்றவை சர்க்கரை நோயாளி களுக்கும் ஏற்ற உணவாகும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in