

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சகோதரர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் கட்சியினர் நேற்று நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர் கூட்டம் ஆட்சியர் மு.கருணா கரன் தலைமையில் நடைபெற்றது. ஆதித்தமிழர் கட்சியினர், மாவட் டச் செயலாளர் மு.கதிரவன் தலை மையில் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மேல்சட்டை அணியாமல், கால ணிகளை கழற்றி கைகளில் வைத் துக்கொண்டு திடீரென ஆர்ப்பாட் டம் நடத்தினர், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷம் எழுப் பியவாறு அவர்கள் ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆட்சியரிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கட்டி வைத்து தாக்குதல்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமியின் சகோதரர் கோவிந்தன், சேலம் மாவட்டம் எடப்பாடியிலுள்ள தனது வீட்டு முன் தாழ்த்தப்பட்ட மக்கள், அருந்ததியர்கள் இரு சக்கர வாகனங்களில் அமர்ந்தும், தலையில் துண்டு கட்டிக்கொண்டும், செருப்பு அணிந்தவாறும் செல்லக் கூடாது என்று கட்டுப்பாடு விதித் துள்ளார்.
காவல்துறையை சேர்ந்த பழனிச் சாமி என்பவர் தனது மகனுக்கு உடல் நிலை சரியில்லாதததால் இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து அவரை கட்டி வைத்து அடித்து உதைத் துள்ளனர். தீண்டாமை வன் கொடுமை செய்யும் கோவிந்தன், அவருக்கு ஆதரவாக செயல் படும் முதல்வர் எடப்பாடி பழனி சாமி ஆகிய இருவர் மீதும் தாழ்த் தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.