Published : 09 Apr 2014 11:04 AM
Last Updated : 09 Apr 2014 11:04 AM

சூப்பர் மார்க்கெட்டில் 5 கிலோ சிலிண்டர்: முதல் நாளில் 25 பேர் பதிவு

இந்தியன் ஆயில் நிறுவனத் தின் சார்பில் சூப்பர் மார்க்கெட் டில் விற்கப்படும் 5 கிலோ சிலிண்டர்களை வாங்குவதற்கு முதல் நாளான செவ்வாய்க்கிழமை 25 பேர் பதிவு செய்துள்ளனர்.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் பெங்களூர், சென்னை, கோரக்பூர், லக்னோ, அலிகர் ஆகிய இடங்களில் முதற் கட்டமாக சூப்பர் மார்க்கெட்டில் 5 கிலோ காஸ் சிலிண்டர்கள் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள காமதேனு கூட்டுறவு மையம் மற்றும் தனியார் காஸ் விற்பனை முகவர்களைக் கொண்டும் மானியம் இல்லாத 5 கிலோ காஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது.

தேனாம்பேட்டையில் உள்ள டி.யு.சி.எஸ். கூட்டுறவு விற்பனை நிலையம், ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார்  நவநீதம் லட்சுமி நிலையம் மற்றும் அடையாரில் உள்ள இந்தியன் காஸ் விற்பனை நிலையம் ஆகிய இடங்களில் மானியம் இல்லாத 5 கிலோ காஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.

மானியம் இல்லாத காஸ் சிலிண்டர் களை வாங்குவதற்கு முதல் நாளான நேற்று தேனாம்பேட்டை காமதேனு டி.யு.சி.எஸ். கூட்டுறவு மையத்தில் 25 பேர் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்தவர்களுக்கு இன்று முதல் காமதேனு மையத்தில் சிலிண்டர்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி கூறுகையில், “ முதற்கட்டமாகத் தேனாம்பேட்டை யில் உள்ள காமதேனு கூட்டுறவு டி.யு.சி.எஸ். மையத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதேபோன்று திருவல்லிக்கேணி. பெசன்ட் நகர், உள்ளிட்ட 5 காமதேனு கூட்டுறவு மையத்தில் மானியம் இல்லாத 5 கிலோ காஸ் சிலிண்டர் விற்பனை செய்யப்பட உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x