

அதிமுக ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கிவிட அனுமதிக்கக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில தினங்களாக மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். இந்த வகையில் இன்று அவர் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ''நான் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் சிகிச்சைகள் தொடர்பான விவரங்களை கேட்டேன். அவர்கள் அளித்த தகவல்கள் என் மனதை சங்கடப்படுத்தின. அதனால்தான், நீதி விசாரணை வேண்டும் என கேட்டேன்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவரை வெளிநாட்டுக்குகொண்டு செல்லலாம் என கூறினேன். ஆனால் மறுத்துவிட்டார்கள். அதிமுக ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்கிவிட அனுமதிக்கக் கூடாது'' என்றார்.