

கலங்கரை விளக்கம் ரயில் நிலையத்துக்கும், மயிலாப்பூர் ரயில் நிலையத்துக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய பறக்கும் ரயில் நிலையத்துக்கு ‘முண்டகக்கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம்’ என்று பெயர் சூட்டி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் இயக்கப்படுகிறது. பயணிகள் வசதிக்காக, கலங்கரை விளக்கம் ரயில் நிலையத்துக்கும் மயிலாப்பூர் ரயில் நிலையத் துக்கும் இடையே ரூ.30 கோடி செலவில் புதிதாக பறக்கும் ரயில் நிலையம் கட்டப்பட்டுள்ளது. புதிய ரயில் நிலையம் கட்டப்படும்போது அந்தந்த மாநில முதல்வர் தான் புதிய ரயில் நிலையத்தின் பெயரை முடிவு செய்து அறிவிப்பார். அதன்படி, இப்புதிய ரயில் நிலையத்துக்கு திருவள்ளு வர் ரயில் நிலையம், மாத வப் பெருமாள் ரயில் நிலையம், சமஸ்கிருதக் கல்லூரி ரயில் நிலையம், முண்டகக்கண் ணியம்மன் கோயில் ரயில் நிலையம் ஆகிய 4 பெயர்களில் ஏதாவது ஒன்றை சூட்டலாம் என்று தமிழக அரசுக்கு ரயில்வே நிர்வாகம் பரிந்துரைத்தது.
இப்புதிய ரயில் நிலையத் துக்கு பெயர் சூட்ட தாம தம் ஏற்படுவதாக புகார் கூறப்பட் டது. இந்த நிலையில், புதிய ரயில் நிலையத்துக்கு முண்டகக் கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம் என்று பெயர் சூட்டி முதல்வர் ஜெயலலிதா உத்தர விட்டுள்ளார்.
இதுகுறித்து ரயில்வே துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
புதிய பறக்கும் ரயில் நிலையத் துக்கு ‘முண்டகக் கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையம்’ என்று முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டியுள்ளார். இதற்கான உத்த
ரவை தமிழக அரசு பிறப்பித் துள்ளது. இந்தப் பெயர் கொண்ட புதிய ரயில் நிலையத்துக்கு எவ்வித சங்கேத குறியீடு வைக்கலாம் என்று கோரி ரயில்வே வாரியத்துக்கு தகவல் அனுப் பியுள்ளோம். சங்கேத குறியீட்டை முடிவு செய்து ரயில்வே வாரியம் ஓரிருநாளில் அனுமதி அளித்துவிடும். அதையடுத்து பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிட்டு, புதிய ரயில் நிலையத்தின் பெயரில் டிக்கெட் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். புதிய ரயில் நிலையம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய ரயில் நிலையத்தையும் சேர்த்தால், சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் நிலையங்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரிக்கும். இப்புதிய ரயில் நிலையம் செயல்படத் தொடங்கியதும், சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தில் இயக்கப்படும் பறக்கும் ரயில்கள் அனைத்தும் முண்டகக்கண்ணியம்மன் கோயில் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.