

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) விரைவில் அமல் படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான இணையதளம் மற்றும் மென்பொருளை உருவாக் கும் பணியை சரக்கு மற்றும் சேவை கட்டமைப்பு நிறுவனம் (ஜி.எஸ்.டி.என்.) மேற்கொண்டு உள்ளது.
இந்நிறுவனம் ஜி.எஸ்.டி. தொடர்பாக www.gst.gov.in என்ற இணையதளத்தை உருவாக்கி யுள்ளது.
தமிழகத்தில் வரி செலுத்து வோர் அடையாள எண் (டின்) பதிவு பெற்ற அனைத்து வணிகர்களும் இந்த இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்த இணையதளத்தில் தற் காலிக ஐ.டி., பாஸ்வேர்டு ஆகியவை மின்னஞ்சல் மற்றும் வணிகவரித் துறையின் https://ctd.tn.gov.in இணையதளம் மூலம் வழங் கப்படும்.
சிறப்பு முகாம்
தற்காலிக ஐ.டி., பாஸ் வேர்டு பெற்றவுடன் ஜி.எஸ்.டி. இணையதளத்தை உபயோகப் படுத்தி வணிகர்கள் பதிவு செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி. பதிவை பூர்த்தி செய்ய https://ctd.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள உதவி கோப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதற்காக வணிகவரித் துறையின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.