

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள பிஎட், எம்எட் இடங்களை நிரப்புவதற்கான இறுதி கட்ட கலந்தாய்வு வருகிற 28-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், அவற்றின் ஒரு செட் நகல்கள் மற்றும் “தி செக்ரட்டரி, தமிழ்நாடு பிஎட் எம்எட் அட்மிஷன்ஸ் கமிட்டி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை-5” என்ற பெயரில் ரூ.2000-க்கு (எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் ரூ.1,000) எடுக்கப்பட்ட டிமாண்ட் டிராப்டை கொண்டுவர வேண்டும். தற்போது நடத்தப்படுவது இறுதிகட்ட கலந்தாய்வு ஆகும். இனிமேல் மறுவாய்ப்பு ஏதும் வழங்கப்படாது. குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் குறிப்பிட்ட வகுப்பினருக்கான காலியிடங் கள் நிரம்பாவிட்டால் அந்த இடங்கள் மற்ற பாடப்பிரிவு களுக்கு மாற்றப்பட்டு நிரப்பப் படும் என்று ஆசிரியர் கல்வி யியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.