

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கினார். இதனால், அக்கட்சியில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் நடந்து வருகின்றன.
ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சி நிர்வாகிகள், முன்னாள் எம்.பி., எம்எல்ஏக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது. மறுபுறம், பெரும்பான்மை பலத்தை நிரூபித்து ஆட்சியமைக்க சசிகலா போராடி வருகிறார்.
இந்த அமளி துமளிக்கிடையே தமிழக அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கியிருப்பது தெளிவு. அதேபோல், அதிமுக எனும் கட்சிக்குள் பயங்கர பிளவு ஏற்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில், தமிழக அரசு நிர்வாகம் இயல்பு நிலைக்குத் திரும்பி, மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் துரிதப்படுத்த வேண்டும் என்பதில் கவனம் அவசியமா? அதிமுக எனும் முக்கிய கட்சியை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டுமா?
யார் யார் என்னென்ன செய்ய வேண்டும்?
விவாதிப்போம் வாருங்கள்.
கீழே உள்ள கருத்துப் பகுதியில் உங்கள் எண்ணங்களை, கருத்துகளைப் பதிவிடுங்கள்.