

ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்குவது தொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மாநில திருத்த சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு அதற்கான அறிவிக்கை தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு சட்டத்தை அமல்படுத்தும் விதமாக தமிழக அரசின் அரசிதழில் இன்று சட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டதன் மூலம் ஜல்லிக்கட்டு ஒரு சட்ட விரோத செயலாகாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஜல்லிக்கட்டு தவிர, மஞ்சுவிரட்டு, வடமாடு, எருது விடு விழா போன்றவற்றுக்கான தடையும் நீக்கப்பட்டுள்ளதாக அரசிதழில் கூறப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு என்பது பாரம்பரிய நாட்டு மாடுகளை பாதுகாக்கும் வகையில் நடத்தப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .