குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் லாரி நீரை நம்பியிருக்கும் பெரம்பூர் மக்கள்: பல ஆண்டுகளாக தீராத பிரச்சினை

குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் லாரி நீரை நம்பியிருக்கும் பெரம்பூர் மக்கள்: பல ஆண்டுகளாக தீராத பிரச்சினை
Updated on
1 min read

குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் தனியார் லாரிகளில் விற்கப்படும் குடிநீரை வாங்கும் கட்டாயம் பெரம்பூர் பகுதி மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

வட சென்னையில் பெரம்பூர், வியாசர்பாடி, செம்பியம், புளியந் தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவது பல ஆண்டுகளாக தொடர் பிரச்சினையாக இருந்து வருகிறது. சென்னை பெருநகர குடிநீர் வாரியம், மாநகர மக்க ளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்கிறது. வட சென்னை பகுதியில் பெரும் பாலான நாட்களில் குடிப்பதற்கு ஏற்ற நீ்ர் வருவதில்லை. பல நாட்கள் கழிவுநீர் கலந்து வருவ தால் அப்பகுதியில் வாரியமே லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்கிறது.

ஒரு குடம் ரூ.7

பெரும்பாலான நாட்களில் தனியார் லாரிகள் மூலம் விற்கப் படும் குடிநீரை நம்பியே மக்கள் வாழ்கின்றனர். தற்போது தனியார் லாரிகளில் குடம் ரூ.7-க்கு குடிநீர் விற்கப்படுகிறது.

இது தொடர்பாக பெரம்பூர் குமாரசாமி தெருவில் வசிப்பவர் களிடம் கேட்டபோது, ‘‘ஆண் டில் சில மாதங்கள் மட்டுமே குடி நீர் வாரியம் மூலம் குடிநீர் வரு கிறது. பெரும்பாலான நாட்களில் கழிவுநீர் கலந்த தண்ணீர்தான் வருகிறது. அதில் புழுக்கள் நெளி யும், சாக்கடை நாற்றமடிக்கும். சில நாட்களில் மட்டுமே குடிநீர் வாரியம் லாரிகளில் தண்ணீர் வழங்குகிறது. மற்ற நாட்களில் குடம் ரூ.7-க்கு தனியார் லாரிகளில் தண்ணீரை வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக போராடியும் இப்பிரச்சினைக்கு தீர்வே கிடைக்கவில்லை’’ என வேதனையுடன் தெரிவித்தனர்.

இது குறித்து குடிநீர் வடி கால் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்சினை இப்போது பெருமளவு தீர்க்கப்பட்டுள்ளது. குழாய் உடைப்புகள் ஏற்படும் சில நேரங்களில் மட்டும் பிரச்சினை ஏற்படுகிறது. குழாய் உடைப்புகள் உடனுக்குடன் சரி செய்யப்படுகின்றன’’ என்றனர்.

வசதிபடைத்தவர்களும், நடுத் தர மக்களும் பணம் கொடுத்து குடிநீர் வாங்கிக் கொள்கின்றனர். ஆனால், ஏழைகள் குறிப்பாக குடிசைகளில் வசிக்கும் மக்கள் வேறு வழியின்றி கழிவுநீர் கலந்த குடிநீரையே பயன்படுத்துகின்றனர். இதனால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய்களுக்கு ஆளாகின்றனர். எனவே, சுத்தமான குடிநீர் கிடைக்க குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரம்பூர் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in