தே.மு.தி.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

தே.மு.தி.கவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Published on

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து தே.மு.தி.கவுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்று பா.ஜ.கவின் மாநிலத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் சென்னை யில் நேற்று நிருபர்களிடம் கூறிய தாவது:

பா.ஜ.க பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி தலைமையிலான பொதுக்கூட்டம் சென்னையில் 8-ம் தேதி நடக்கவுள்ளது. இதில் கூட்டணிக் கட்சிகளின் தலை வர்கள் கலந்துகொள்வார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.க.வுடனான அதிகாரப்பூர்வ கூட்டணி அறிவிப்பை இன்னும் இரண்டு தினங்களில் அறிவிக்கவுள்ளோம். தே.மு.தி.க. சார்பில் சுதீஷ் எங்களுடன் பேசினார். பா.ம.க.வுடனும் பேசி வருகிறோம். ஃபார்வேர்டு ப்ளாக் கட்சியின் ஒரு பிரிவினர் சில மாதங்களுக்கு முன் எங்களை வந்து சந்தித்தார்கள். இந்திய ஜனநாயக் கட்சி ஏற்கெனவே பா.ஜ.க.விற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

கொங்கு பிரதேசத்தை சேர்ந்த கொங்கு நாடு முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் பா.ஜ.க.வுடன் இணைய விருப்பம் தெரிவித்துள் ளன. இக்கட்சிகளுடனான கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும். மோடியை பிரதமராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளையும் எங்கள் கூட்டணிக்கு வரவேற்கிறோம்.

தமிழகத்தில் மோடி அலை வீசவில்லை கடல் அலை தான் வீசுகிறது என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். கடல் அலை தமிழகத்தை சுற்றி பல காலமாகவே வீசி வருகிறது, அது இப்போது தான் வாசனின் கண்களுக்கு தெரிகிறது என்று நினைக்கிறேன். தேர்தலுக்கு பின் மோடி அலை பற்றி அவர் புரிந்து கொள்வார்.இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

முன்னதாக தமிழக விவசாய சங்கத்தினர் பொன்.ராதா கிருஷ்ணனை சந்தித்து தங்களது ஆதரவை பா.ஜ.க.விற்கு அளிப்பதாக கூறினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in