நதிநீர் பிரச்சினை அணுகுமுறையில் தமிழக அரசுக்கு வைகோ பாராட்டு

நதிநீர் பிரச்சினை அணுகுமுறையில் தமிழக அரசுக்கு வைகோ பாராட்டு
Updated on
1 min read

நதிநீர் பிரச்சினைகளை தமிழக அரசு சரியாகவே அணுகி வரு கிறது என்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்தார்.

திருநெல்வேலியில் நேற்று நடைபெற்ற, தென் மண்டல மதிமுக மகளிரணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

நதிநீர் பிரச்சினைகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை காலில் போட்டு மிதிக்கும் பல்வேறு மாநில அரசுகளை மத்திய அரசு கண்டிக்கவில்லை. சிறுவாணி யின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட அனுமதி அளித் துள்ள மத்திய அரசுதான் குற்ற வாளி. சிறுவாணி அணைப் பிரச்சினையில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்ற திமுக தலைவர் கருணாநிதியின் யோசனை தவ றானது. ஏற்கெனவே காவிரி பிரச் சினையில் தீர்வுகள் காணப்படா மல் இருக்கிறது.

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் சிறந்த தீர்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்றி இருக்கிறார். மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரள அரசுக்கு மத்திய அரசு கொடுத்துள்ள அனுமதியை திரும் பப்பெற வேண்டும். இல்லை யெனில் போராட்டம் நடத்தப்படும்.

நதிநீர், மீத்தேன் திட்ட பிரச்சினைகளை தமிழக அரசு முறையாக அணுகி வருகிறது. இப்பிரச்சினைகளில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்ட நிலைக்கு வரும்போது தான் அனைத்துக் கட்சி கூட் டத்தை நடத்தலாம். தண்ணீர் பிரச்சினைகளில் தமிழகம் முழு வதும் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் ஒன்று திரண்டு வர வேண்டும்.

தமிழக சட்டப் பேரவை நட வடிக்கைகள் ஆரோக்கியமாக இல்லை. உள்ளாட்சிகளில் நக ராட்சி, பேரூராட்சி தலைவர்களை கவுன்சிலர்களே தேர்ந்தெடுப்பது ஜனநாயகத்துக்கு ஏற்புடைய தல்ல. சட்டப்பேரவையில் இருந்து உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்யக் கூடாது. பேரவைத் தலைவரை உறுப்பினர்கள் அவ மதிக்கக் கூடாது. சட்டப்பேரவைத் தலைவரின் உருவபொம்மையை திமுகவினர் எரித்தது பண்பாடற்ற செயலாகும்.

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நல கூட்டியக்கத்தில் உள்ள மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை கள் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடும். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளில் அவரை சந்தித்தபோது தேர்தல் குறித்து எதையும் பேசவில்லை. மக்கள் நல கூட்டியக்கத்தில் தேமுதிக, தமாகா இல்லை. சட்டப் பேரவை தேர்தல் கூட்டணியில் தான் அவை இருந்தன.

இவ்வாறு வைகோ கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in