

சரியான சந்தை மதிப்பை பிரதி பலிக்கும் வகையில் நிலங்களின் சந்தை வழிகாட்டி மதிப்பு சீரமைக்கப்பட்டு வருகிறது என பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் வணிக வரி வாயிலாக ரூ.2 லட்சத்து 66 ஆயிரத்து 305 கோடி வருவாய் ஈட் டப்பட்டுள்ளது. வணிகர்கள் வசதிக் காக, இணைதயளம் மூலம் வரி செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட் டுள்ளது. தற்போது மாதந்தோறும் 85 ஆயிரம் வணிகர்கள், ரூ.4,600 கோடி வரியை இணையதளம் மூலம் செலுத்தி வருகின்றனர்.
அரசுக்கு வருவாய் ஈட்டித் தருவதில் முக்கிய பங்காற்றும் பதிவுத்துறையில் கடந்த 5 ஆண்டு களில் 1.39 கோடி பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.38,973 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த 2015-16ல் மட்டும் ரூ.8,562.38 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.
தமிழகத்தில் 3.97 லட்சம் சர்வே எண்கள், 1.84 லட்சம் தெருக்களின் வழிகாட்டி மதிப்புகள் பதிவுத் துறை இணையதளத்தில் வெளி யிடப்பட்டுள்ளன.
வழிகாட்டி மதிப்புகள் ஆண்டு தோறும் திருத்தப்பட வேண்டும். இருப்பினும் மதிப்பீட்டுக் குழுவின் முடிவுகள்படி, 2013 முதல் 2016 வரையான ஆண்டுகளுக்கு சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பு திருத்தங் கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சரியான சந்தை மதிப்பை பிரதி பலிக்கும் வகையில் நில வழிகாட்டி மதிப்பில் தேவையான சீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கின்றன. பதிவுத்துறையில் விரை வாக வெளிப்படையாக சேவை வழங்கும் வகையில் செயல்பாடுகள் முழுவதும் கணினி மயமாக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.