குமரியில் நிலவும் மேகமூட்டத்தால் 15 நிமிடம் தாமதமாக தென்படும் சூரிய உதயம்: மறையும் காட்சியும் துல்லியமாக தெரிவதில்லை
கன்னியாகுமரியில் மேகமூட்டத் தால் காலையில் சூரிய உதயத்தை 15 நிமிடம் தாம தமாகவே காணமுடிகிறது. மாலையில் அஸ்தமன காட்சியும் துல்லியமாக தெரியவில்லை.
சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் காண கன்னியா குமரியில் சுற்றுலா பயணிகள் குவி கின்றனர். முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, பகவதியம்மன் கோயில் வளாகம், கடற்கரை சாலை, காட்சி கோபுரம், விவேகானந்த கேந்திரா கடற்கரை வளாகம் ஆகிய இடங்களில் இருந்து சூரிய உதயத்தை பார்த்து உற்சாகமடைகின்றனர். ஆனால் மே மாத தொடக்கத்தில் இருந்தே கன்னியாகுமரியில் காலை, மாலை வேளைகளில் மேகமூட்டம் அதிகளவில் காணப் படுகிறது. இதனால் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமன காட்சி களை மனநிறைவு இன்றி பார்வை யிடும் நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கத்தைவிட 15 நிமிடம் தாமதமாகவே, சூரிய உதயத்தை காண முடிகிறது.
குமரியில் துல்லியம்
இதுகுறித்து நெய்யாற்றின் கரை இயற்கை ஆர்வலர் ராஜேந்திரகிருஷ்ணன் கூறும் போது,
‘உலகில் எத்தனையோ கடற் கரை பகுதிகளும், மலைகளும் உள்ளன. ஆனால், கன்னியாகுமரியில் தென்படும் சூரிய உதயம், அஸ்தமனம் தான் துல்லியமானது என, அறிவியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சூரிய உதய நேரம் காலை 6 மணி என, அறிவியல் மையம் கணித்துள்ளது. ஆனால் தற்போது நிலவும் மேகமூட்டத்தால் காலை 6.15 மணிக்கு பின்னரே சூரிய உதயத்துக்கான அடையாளம் தெரியத்தொடங்குகிறது. காலை 6.30 மணிக்கு பின்னர் தான் முழுமையாக சூரிய உதயத்தை காண முடிகிறது. இதைப் போல் மாலையில் மேற்கு பகுதியிலும் மேகம் சூழ்ந்து காணப்படு வதால் சூரியன் மறைவதை யும் திருப்தியாக பார்க்கமுடிவதில்லை’ என்றார் அவர்.
