தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 6 மாணவிகள் முதலிடம்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 6 மாணவிகள் முதலிடம்
Updated on
1 min read

தமிழ்நாடு வேளாண்மைப் பல் கலைக்கழக மாணவர் சேர்க்கைக் கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் 6 மாணவிகள் முதலிடம் பிடித்துள்ளனர்.

கோவையில் உள்ள தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின்கீழ் 14 உறுப்புக் கல்லூரி கள், 21 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. இணையதளம் மூலமாக இளம் அறிவியல், இளம் தொழில் நுட்ப பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. இந்நிலையில், விண்ணப்பித்தவர் களுக்கான கலந்தாய்வு தரவரிசைப் பட்டியலை, பல்கலைக்கழக துணைவேந்தர் கு.ராமசாமி நேற்று வெளியிட்டார்.

அவர் கூறும்போது, “பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளில் 1220, இணைப்புக் கல்லூரிகளில் 1600 என 2820 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதற்கு 53047 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கட்-ஆப் மதிப்பெண் அடிப்படை யில் தயாரிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலில் கிருத்திகா, கீர்த்தனா ரவி, ஷோபிலா, செளமியா, சக்‌ ஷைன், ஆர்த்தி ஆகிய 6 மாணவிகள் 200-க்கு 200 கட்-ஆப் மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு 35.7 சதவீதம் பேர் கூடு தலாக விண்ணப்பித்துள்ளனர். வேளாண் படிப்புகளுக்கு கிடைக் கும் வேலைவாய்ப்புகளும், கல்வி முறையுமே இந்த வரவேற்புக்கு காரணம்.

4 கல்லூரிகளுக்கு தடை

உள்கட்டமைப்பு வசதிகள் சரி யில்லாததால், தமிழகத்தில் 4 தனி யார் வேளாண்மை கல்லூரி களுக்கு, தற்காலிகமாக சேர்க்கை நிறுத்திவைக்கப்படுகிறது. இந்த கல்வி ஆண்டு தொடங்குவதற்குள் வசதிகள் மேம்படுத்தப்பட்டால், சேர்க்கை நடத்த அனுமதி வழங் கப்படும். அதேசமயம் குடியாத்தம், திருவண்ணாமலையில் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக சேர்க்கை நிறுத்திவைக்கப்பட்ட இரு கல்லூரிகள், இந்த ஆண்டு திறக்கப்பட வாய்ப்பு உள்ளது.

அதிகம் பேர் விண்ணப்பித்துள்ள காரணத்தால் கலந்தாய்வு உள்ளிட் டவை முடிந்ததும், 10 சதவீத சேர்க்கை அதிகரிக்கப்படும். இந் திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத் தின் பொது நுழைவுத் தேர்வு மூல மாக 140 இடங்கள் நிரப்பப்படும்.

16-ம் தேதி கலந்தாய்வு

சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வு ஜூன் 16-ம் தேதியும், முதல் கட்ட பொதுக் கலந்தாய்வு 19 முதல் 24-ம் தேதி வரையும், தொழில் கல்விக்கான கலந்தாய்வு 28-ம் தேதியும், என்ஆர்ஐ இட ஒதுக்கீடு கலந்தாய்வு 30-ம் தேதியும் நடைபெறுகின்றன. ஆகஸ்ட் 31-ம் தேதி சேர்க்கை நிறைவடையும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in