

தமிழகத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலுக்கான மேற்பார்வை யாளராக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக புதன் கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப் பில் கூறப்பட்டு இருப்பதாவது: தமிழகத்தில் மாநிலங்களவைக்கான தேர்தல் அடுத்த மாதம் 7-ம் தேதி நடக்க வுள்ளது. இந்த தேர்தலுக்கு போட்டியிடுவதற்காக மனுக்களை பரிசீலனை செய்யவும், வாக்குப் பதிவு கண்காணிப்பு, வாக்கு எண்ணிக்கை போன்ற பணிகளைக் கண்காணிக்க மேற்பார்வையாளராக தமிழக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.