ஹவாலா பணம் ரூ.4 கோடியை கொள்ளையடித்த போலீஸார் சிக்கினர்: காவல் ஆய்வாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம்

ஹவாலா பணம் ரூ.4 கோடியை கொள்ளையடித்த போலீஸார் சிக்கினர்: காவல் ஆய்வாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம்
Updated on
2 min read

கோவை மதுக்கரை அருகே கடந்த மாதம் 25-ம் தேதி சென்னையில் இருந்து கேரள மாநிலம் மலப்புரம் நோக்கி ஒரு கார் சென்றது. அந்த காரை, போலீஸ் உடையில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து, காரில் வந்தவர்களை இறக்கிவிட்டு, காரை சோதனையிடுவது போல் நடித்து, காரை கடத்திச் சென்றனர்.

ரூ.3.90 கோடி பணத்துடன் கார் கடத்தப்பட்தாகக் கூறப்பட்டது. ஆனால், காரின் சொந்தக்காரரான கேரள மாநிலம் மலப்புரம் தங்க நகைக் கடை உரிமையாளர் அன்வர் சதா, கார் மட்டும் கடத்தப்பட்டதாக கோவை மாவட்ட போலீஸாரிடம் புகார் அளித்தார். காரில் இருந்தது ஹவாலா பணம். அதை மறைத்தே புகார் தரப்பட்டிருக்கிறது என்ற சர்ச்சை எழுந்தது. 4 தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி 27-ம் தேதி பாலக்காடு அருகே நின்ற காரை மீட்டனர்.

இது தொடர்பாக, மலப்புரத்தைச் சேர்ந்த சுதீர், சுபாஷ், ஜாகீர் ஆகியோரைப் பிடித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்திய தில், காரையும் அதில் இருந்த ரூ.3.90 கோடியையும் கொள்ளையடித்து, அதில் ரூ.1.90 கோடியை தாங்கள் எடுத்துக்கொண்டு, மீதம் 2 கோடியை, உடந்தையாக இருந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் முத்துக்குமார், உதவி ஆய்வாளர் சரவணன், தலைமைக் காவலர் தர்மேந்திரன் ஆகியோரிடம் வழங்கியதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவல் ஆய்வாளர் முத்துக்குமாரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து கரூர் மாவட்ட போலீஸார் கூறியதாவது:

கரூர் மாவட்டம் வீரராக்கியத்தில் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி தொழிலதிபர் வீட்டு காவலாளிகள் கடத்தப்பட்ட வழக்கு விசாரணை தனிப்படையில், க.பரமத்தி காவல் ஆய்வாளர் என்.முத்துக்குமார், குளித்தலை காவல் உதவி ஆய் வாளர் சரவணன், வேலாயுதம் பாளையம் தலைமைக் காவலர் தர்மேந்திரன் ஆகிய 3 பேரும் இடம்பெற்றிருந்தனர். இவர் களுக்கு, கோவை பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் 4 கோடி ரூபாய் பணத்துடன் கார் கடத்தப் பட்ட வழக்கில் தொடர்பு இருப்ப தாக கோவை தனிப்படை போலீ ஸாருக்கு தெரியவந்துள்ளது.

தொழிலதிபர் வீட்டு காவலாளி கள் கடத்தப்பட்ட வழக்கு தொடர் பாக என்.முத்துக்குமார், சரவணன், தர்மேந்திரன் ஆகிய 3 தனிப்படை போலீஸாரும் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி உடுமலைக் குச் சென்றிருந்தனர். அந்த சமயத் தில்தான், ரூ.3.90 கோடி பணத்துடன் காரை கடத்திக்கொண்டு சென் றுள்ளனர்.

இதையடுத்து, காவல் ஆய் வாளர் முத்துக்குமாரை, கோவை ஏடிஎஸ்பி சந்திரமோகன் நேற்று முன்தினம் விசாரணைக்கு அழைத் துச் சென்றுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், உதவி ஆய்வாளர் சரவணன், தலைமைக் காவலர் தர்மேந்திரன் ஆகிய இருவரும் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப் படுகிறது.

இந்தநிலையில், காவல் ஆய்வாளர் என்.முத்துக்குமார், காவல் உதவி ஆய்வாளர் சரவணன், தலைமைக் காவலர் தர்மேந்திரன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டிஐஜி அருண் உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in