

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதில் தமிழக காவல் துறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வராக தற்போது வரை ஓ.பன்னீர்செல்வம் இருக் கிறார். அரசு அதிகாரிகளும், காவல் துறையினரும் அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். ஆனால் மறைமுக அதிகார மையமாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் இருப்பது காவல் துறை அதிகாரிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் இரவு முதல் வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென ஜெயலலிதாவின் சமாதியில் சென்று அமர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த விஷயம் தொலைக்காட்சிகளில் வெளி யான பின்னரே சசிகலா தரப் புக்கு தெரியவந்தது. உடனே, முதல்வரின் பாதுகாப்பு பிரிவு உயர் அதிகாரி யும், எஸ்.பி அந்தஸ்தில் இருக்கும் அதிகாரி யுமான ஒருவருக்கு, சசிகலா தரப்பில் இருந்து தொலை பேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், ‘ஜெயலலிதாவின் சமாதிக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்ததை என்னிடம் ஏன் தெரி விக்க வில்லை’ என்று கேட்டுள் ளார். அதற்கு அந்த அதிகாரி, ‘நான் நேரில் வந்து சொல்கிறேன்’ என்று கூறி விட்டு சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். அன்று நள்ளிரவு போயஸ் கார்டனில் சசிகலா பேட்டி கொடுத்தபோது, அந்த அதிகாரி சசிகலாவின் பின்னால் நின்று கொண்டிருந்தார் .
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத் தின் வீட்டுக்கு வெளியே பாது காப்புக்கு நின்ற சில போலீ ஸார் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தபோது, ‘சசிகலா முதல்வராக வந்தால் காவல் துறைக்கு நல்லது நடக்கும். ஒவ்வொரு போலீஸ்காரருக்கும் அவர்கள் விருப்பப்பட்ட இடத்தில் வீடுகட்டுவதற்கு 3 சென்ட் நிலம் இலவசமாக கொடுக்கப்படும் என்று துணை ஆணையர் தெரிவித்தார்’ என்று பேசிக்கொண்டிருந்தனர். இதுகுறித்து நாம் விசாரித்தபோது, காவல் துறையினரின் ஆதரவை பெறுவதற்கு சில அதிகாரிகள் மூலம் இப்படி ஒரு தகவலை சிலர் பரவவிட்டிருப்பது தெரியவந்தது.
காவல்துறை அதிகாரிகளில் ஒரு பிரிவினர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக உள்ளனர். “முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை அணுகி பேசுவது எளிதாக உள்ளது. அதிகார மைய மாக அவர் ஒருவரே இருக்கிறார். சசிகலா முதல் வராக வந்தால் பலரின் கையில் அதிகாரம் இருக்கும். எளிதில் சந்தித்து பேசக்கூட முடியாத நிலை ஏற்படும். ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த கலவர சம்பவங்களில் போலீஸாரின் நிலைமையை மிக அருமையாக ஓபிஎஸ் புரிந்து கொண்டார். அந்த இடத்தில் வேறுயாராக இருந்தாலும் இந் நேரம் பல போலீஸ் அதிகாரிகளை பலிகடா ஆக்கியிருப்பார்கள்’ என்று அவர்கள் வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.
இதுபோன்று ஜெயலலிதா ஆட் சியில் இருந்தபோதும், அதற்கு பின்னரும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் ஆதரவு மூலம் காவல் துறையில் பலர் விரும்பிய துறை மற்றும் இடங்களில் இடமாற் றம் பெற்று பணிபுரிகின்றனர். இந்த போலீஸார் அனைவரும் தற்போது சசிகலா முதல்வர் ஆவதையே விரும்புகின்றனர். காவல் துறை டிஜிபி அலுவலகத்தில் பணிபுரி யும் ஏடிஜிபி அந்தஸ்தில் இருக் கும் ஒருவரும், சென்னை பெரு நகர காவல் ஆணையர் அலுவல கத்தில் கூடுதல் ஆணையர் அந் தஸ்தில் இருக்கும் ஒருவரும் சசிகலா தரப்புக்கு முழு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். காவல் துறையின் பல தகவல்கள் இவர் கள் மூலமே சசிகலா தரப்புக்கு சொல்லப்படுகிறது. அதே நேரத் தில் காவல் துறையில் தலைமை பதவியில் இருக்கும் அதிகாரி கள் சிலர் யாருக்கு ஆதரவு தெரி விப்பது என்பதில் குழப்பத்தில் உள்ளனர். இவர்கள் ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா இருதரப்பையும் பகைத்துக் கொள்ளாமல் பணி செய்து வருகின்றனர்.