Published : 02 Jan 2016 08:42 AM
Last Updated : 02 Jan 2016 08:42 AM

ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 3 செவிலியர்கள் பலி: விபத்துக்கு காரணமானவர்களை பிடிக்க தனிப்படை

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்ட லம் பகுதியில் தேசிய நெடுஞ் சாலையை கடக்க முயன்ற தனியார் மருத்துவமனை செவிலி யர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 3 செவிலியர்கள் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தனர். காய மடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தன்ராஜ் மகள் கலையரசி (23), வளசைபட்டு கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகள் சரஸ்வதி (22), மேல்விசாரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மகள் குப்பு (23), மோட்டூர் பகுதியைச் சேர்ந்த கவிதா (23), பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த காசிராஜன் மகள் கலையரசி (26), பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகள் மாலா (21), கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் மகள் சரஸ்வதி (23) ஆகியோர், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்ட லம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் செவிலியர்களாக பணிபுரிந்து வந்தனர்.

மருத்துவமனையின் விடுதி யில் தங்கியுள்ள இவர்கள், புத் தாண்டை முன்னிட்டு மேவளூர்குப் பம் பகுதியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் நேற்று நடைபெற்ற சிறப்பு ஜெபக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பிறகு, தங்களது விடுதிக்கு திரும்புவதற்காக சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை 5 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, வேலூர் பகுதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வகானம் ஒன்று இவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கலையரசி (தன்ராஜ் மகள்), சரஸ்வதி, குப்பு ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த மற்ற 4 பேரை மருத்துவமனையில் சேர்த் தனர். இறந்தவர்களின் உடல் களை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஸ்ரீபெரும்புதூர் போலீ ஸார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து, ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் வட்டாரங்கள் கூறியதா வது: செவிலியர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியவர்களை பிடிக்க, டிஎஸ்பி ஜெயக்குமார் தலைமையில் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார் சத்திரம் ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. இவர்கள், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோதனைச் சாவடிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x