Published : 02 Apr 2017 09:18 AM
Last Updated : 02 Apr 2017 09:18 AM

விவசாயிகள் போராட்டத்தால் பாஜகவுக்கு திடீர் நெருக்கடி

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் தமிழக பாஜகவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கி களில் பெறப்பட்ட விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழகத்துக்கு கூடுதல் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் 18-வது நாளாக தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராடி வரு கின்றனர்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் போராடும் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

தமிழ் ஊடகங்கள் மட்டுமின்றி இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழி ஊடகங்களிலும் இந்தப் போராட்டம் பரபரப்பு செய்தி யாக வெளியிடப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் போராட்டம் தேசிய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, ராதாமோகன் சிங் உள்ளிட்டோர் விவசாய சங்கப் பிரதிநிதிகளை நேரில் அழைத்துப் பேசினர். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று பேச்சு நடத்தினார். ஆனாலும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. இது பாஜகவுக்கு குறிப்பாக தமிழக பாஜகவுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக அங்கு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. ஆர்.கே.நகரில் அதிக வாக்குகளைப் பெறுவதன் மூலம் தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த தமிழக பாஜக தலைவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். ஆனால், டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டமும், அவர்களுக்கு ஆதரவாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் நடக்கும் போராட்டங்களும் தமிழக பாஜக தலைவர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட புது வண்ணாரப்பேட்டையில் பாஜக வேட்பாளர் கங்கை அமரன் பிரச்சாரம் செய்தபோது இளைஞர் ஒருவர், ‘‘விவசாயிகள் போராட்டத்தை கண்டுகொள் ளாத நீங்கள் ஏன் பிரச்சாரம் செய்கிறீர்கள்?’’ என கோஷ மிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக நிர்வாகிகள், தங்கள் தலைவர்கள் பிரச்சாரத் துக்கு கூடுதல் பாதுகாப்பு கோரி யுள்ளனர்.

மாநில பிரச்சினைகள்

இது தொடர்பாக தமிழக பாஜக மூத்த தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தைவிட கர்நாடகம், ஆந்திரம், தெலங் கானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ளன. அந்த மாநிலங் களைப் போலவே தமிழகத்துக்கும் வறட்சி நிவாரண நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவ சாயிகளின் பெரும்பாலான பிரச்சினைகள் மாநில அரசு களுடன் தொடர்புடையன. ஆனால், பாஜகவுக்கு அவப்பெயர் உண்டாக்க வேண்டும் என்பதற் காக சிலர் போராடி வருகின்றனர். அவர்களுக்கு எங்களின் அரசியல் எதிரிகள் ஊக்கமளித்து வருகின்றனர். இதனால் எங்களுக்கு தற்காலிக நெருக்கடிகள் ஏற்பட்டாலும் நிரந்தரமான பாதிப்பு எதுவும் ஏற்படாது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x