

மத்திய, மாநில அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் தொடர்பான மனுக்களை விசாரணைக்கு ஏற்ப தற்கு முன்பு தலைமை நீதிபதியி டம் கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என உயர் நீதிமன்ற அலு வலர்களுக்கு உத்தரவிடப்பட் டுள்ளது.
மத்திய, மாநில அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்திலும், அதன் மதுரை கிளையிலும் பல் வேறு வழக்குகள் தாக்கல் செய் யப்படுகின்றன. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் உள்ள சசி கலாவை சந்தித்ததற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டை யன், திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், செல்லூர் கே.ராஜூ ஆகியோரை தகுதியிழப்பு செய் யக் கோரி பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதியின் ஒப்பு தலுக்குப் பிறகே விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பதை முடிவு செய்வதற்காக ஏப். 11-க்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் (நீதி) பி.ராஜ மாணிக்கம், சென்னை உயர் நீதி மன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவுத்துறைக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், “மத்திய, மாநில அமைச்சர் கள், எம்பிக்கள், எம்எல்ஏக்களை சேர்த்து தாக்கல் செய்யப்படும் மனுக்களை தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெறாமல் ஏற்கக்கூடாது. இந்த மனுக்கள் தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் தலைமை நீதிபதிக்கு அனுப்ப வேண்டும். தலைமை நீதிபதி ஒப்புதல் வழங்கிய பிறகே பிரதான வழக்கு எண் வழங்கி சம்பந்தப்பட்ட நீதிபதியின் முன்பு விசாரணைக்கு கொண்டுவர வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் கருத்து
இந்த புதிய சுற்றறிக்கையால், நேர விரயம் ஏற்படும் என்றும் தலைமை நீதிபதிக்கு பணிப் பளு அதிகரிக்கும் என்றும் சில நீதிமன்ற அலுவலர்களும், வழக்கறிஞர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த சுற்றறிக்கையில் அமைச் சர்கள், எம்பி, எம்எல்ஏக்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்கப் படும் வழக்குக்கு மட்டும் தலைமை நீதிபதியிடம் ஒப்புதல் பெற வேண் டும் என சொல்லப்படவில்லை. அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக் கள் சேர்க்கப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் அனுமதி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மனுதாரர்களாக இருந்து தாக்கல் செய்யும் மனுக் களுக்கும் தலைமை நீதிபதியிடம் அனுமதி பெற வேண்டுமா என்பது தெரியவில்லை.
மேலும், மதுரை கிளையில் தாக்கல் ஆகும் வழக்கு கட்டுகளை தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற சென்னைக்கு அனுப்பி, ஒப்புதல் பெறப்பட்டு கட்டுகள் சென்னையில் இருந்து மதுரை வந்ததும், பிரதான எண் வழங்கி விசாரணைக்கு பட்டிய லிடுவதற்கு பல நாட்கள் ஆகும்” என்றனர்.