

பால் விலை உயர்வைக் கண்டித்து சென்னையில் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்தியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல் பிறந்தநாளை (இன்று) தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். அதன் பேரில் நாடு முழுவதும் ஒற்றுமை ஓட்டம், உறுதி ஏற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
சென்னையில் இன்று காலை சிறப்பு ஒற்றுமை ஓட்ட நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்துகொள்கின் றனர்.
தமிழக அரசு பால் விலையை வரலாறு காணாத அளவு உயர்த்தியுள்ளது. உத்தேச மின் கட்டண உயர்வு குறித்த தகவலும் வெளியாகியுள்ளது. இதை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று மாலை 4 மணி அளவில் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
இவ்வாறு பாஜக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.