

முல்லை பெரியாறு விவகாரத் தில், பேச்சுவார்த்தை மூலமாகவே சுமூக தீர்வு எட்டப்படும் என்று, கேரள மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்தார்.
கோவையில் நடைபெற்று வரும் சர்வதேச கயிறு உற்பத்தி பொருட்கள் கண்காட்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
3 மாதங்களுக்குள், ஒருங்கி ணைந்த மேம்படுத்தப்பட்ட சோதனைச்சாவடியாக வாளை யாறு சோதனைச்சாவடி உருவாக்கப்படும். ரயில் மோதி யானைகள் பலியாவதை தடுக்க, மத்திய அரசு மற்றும் தமிழக அரசுடன் இணைந்து கொள்கை முடிவு எடுக்கப்படும்.
முல்லை பெரியாறு விவகா ரத்தில், தமிழக - கேரள அரசு களின் பேச்சுவார்த்தை மூலமாக சுமூக தீர்வு எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கேரளத் தில் மாயமான 21 பேர். ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்த தாகக் கூறப்படுவது தொடர்பாக, போலீஸார் விசாரித்து வருகின் றனர். இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.