

தென்மாவட்ட மக்கள் பலனடைய எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைப்பதற்காக தனது அமைச்சர் பதவியை தியாகம் செய்ய தயார் என வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு 2015-ல் அறிவித்தது. இதற்காக மதுரை தோப்பூர், தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி, புதுக்கோட்டை நகர், ஈரோடு அருகே பெருந் துறை, செங்கல்பட்டு ஆகிய 5 இடங்களைத் தமிழக அரசு பட்டியலிட்டது. இந்த இடங்களை மத்தியக் குழு 2015-ம் ஆண்டு ஏப்ரலில் ஆய்வு செய்தது. ஆய்வு அறிக்கையை மத்திய அரசிடம் குழு சமர்ப்பித்துள்ளது.
இந்நிலையில், மத்திய சுகா தாரம், குடும்ப நலத் துறை அமைச்ச கத்தின் இணைச் செயலாளர் சுனில் சர்மாவுக்கு தமிழக சுகா தாரத் துறை செயலர் ராதா கிருஷ்ணன் கடந்த 5-ம் தேதி அனுப்பியுள்ள கடிதத்தில், முதல் வரின் கோரிக்கையை ஏற்று செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் அமைப் பதற்கான அறிவிப்பை வெளி யிடுமாறு கேட்டுக்கொண்டுள் ளார்.
இந்நிலையில், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதய குமார் நேற்று கூறியது:
எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைத்தால் மட்டுமே தென்மாவட்ட மக்களின் கனவு நனவாகும் என முதல்வரிடம் மனு அளித்துள்ளேன். இந்த மருத்துவ மனை மதுரையில் அமைய அனைத்து முயற்சிகளும் எடுக் கப்படும். தென்மாவட்ட மக்க ளுக்கு இந்த மருத்துவமனை தேவை என்பதை மத்திய அர சுக்கு புரிய வைப்பதற்காக எனது அமைச்சர் பதவியை தியாகம் செய்யவும் தயார் என்றார்.