பொய்ப் பிரச்சாரத்தால் மக்களை பாஜக ஏமாற்ற முடியாது: மல்லிகார்ஜூன கார்கே பேச்சு

பொய்ப் பிரச்சாரத்தால் மக்களை பாஜக ஏமாற்ற முடியாது: மல்லிகார்ஜூன கார்கே பேச்சு
Updated on
1 min read

குஜராத் பாஜக ஆட்சியைவிட அதிக வளர்ச்சிப் பணிகளை, தமிழகத்தில் காமராஜரின் காங்கிரஸ் ஆட்சி செய்து விட்டது என்று, நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே கூறியுள்ளார்.

மனித உரிமைக் குறியீடு சர்வே அடிப்படையில், குஜராத்தைவிட தமிழகம் முன்னணியில் உள்ளது என்றும் தெரிவித்தார்.

சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் சத்தியமூர்த்தி மற்றும் காமராஜர் சிலை திறப்பு விழாவில், காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது: காமராஜர் ஆட்சியில்தான் பல்வேறு அணைகள் கட்டப்பட்டன. பெல், என்.எல்.சி., மணலி பெட்ரோலிய சுத்திகரிப்பு, ரயில் பெட்டி தொழிற்சாலை போன்றவற்றை தமிழகத்துக்கு கொண்டு வந்தார். ஏழைகளுக்காக, பாமர மக்களுக்காக கல்வி, சுகாதாரம் கிடைக்கும் வகையில் தன் ஆட்சியில் திட்டங்கள் கொண்டு வந்து, தமிழகத்தை இந்தியாவில் முன்னணி மாநிலமாக மாற்றினார்.

தற்போது குஜராத்தை பற்றி பாஜகவினர் பிரச்சாரம் செய்கின் றனர். அவர்கள் விளம்பரத்துக்கான திட்டங்களை, பெரும் தொழிலதிபர் களுக்கான திட்டங்களை மட்டுமே வைத்துள்ளனர்.

தற்போதுகூட பாஜக ஆட்சியில், காங்கிரஸ் அரசு கொண்டு வந்த திட்டங்களை நிறைவேற்றி, அதற்கு உரிமை கொண்டாடி விளம்பரம் தேடுகின்றனர். காங்கிரஸ் ஆட்சியின் திட்டங்கள் குறித்து பொய்ப் பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்துவிட்டனர் என்றார்.

கேரள முதல்வர் உம்மன் சாண்டி பேசியதாவது: காமராஜர், சத்தியமூர்த்தி ஆகியோர் மிகச் சிறந்த தலைவர்கள் மட்டுமல்ல. அவர்கள் தேசிய அளவில் இளைஞர்களுக்கு முன் மாதிரியான ரோல் மாடல் ஆவர். காமராஜர் ஆட்சிக் காலம் தமிழகத்தின் பொற்காலமாகும். மீண்டும் சோனியா, ராகுல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். அதற்கு தலைவர்கள் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in