மாணவி தற்கொலைக்கு ராகிங் காரணம்?- குன்னூர் கோட்டாட்சியரிடம் பெற்றோர் புகார்

மாணவி தற்கொலைக்கு ராகிங் காரணம்?- குன்னூர் கோட்டாட்சியரிடம் பெற்றோர் புகார்
Updated on
1 min read

குன்னூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு ராக்கிங் தான் காரணம் என அவரது பெற்றோர் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சின்ன கரும்பாலம் பகுதியைச் சேர்ந்த ராஜு, ஜெயலட்சுமி தம்பதியரின் மகள் பிரீத்தி. சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு சேர்க்கப் பட்டார்.

இரண்டாவது நாளிலேயே விடுதியிலேயே துப்பட்டாவில் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரீத்தியின் பெற்றோர் குன்னூர் கோட்டாட்சியரிடம் நேற்று மனு அளித்தனர்.

மாணவியின் தாய் ஜெயலட்சுமி கூறும் போது, ‘சம்பவத்தன்று இரவு, கல்லூரியில் சீனியர் மாணவியர் ராக்கிங் செய்வதாகவும், எனவே கல்லூரியில் படிக்க விருப்பமில்லை என்றார். எனவே, வீட்டுக்கு அழைத்துச் செல்ல வலியுறுத்தினார். நாங்கள் கல்லூரிக்கு செல்வதற்குள் ப்ரீத்தி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்தனர். ஆனால், நள்ளிரவு வரை உடலை தராமல் கல்லூரி நிர்வாகம் இழுத்தடித்தது.

மகள் சாவுக்கு ராகிங் தான் காரணம். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மனு அளித்துள்ளோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in