அரசு பணிகளுக்கு என்னென்ன தேர்வு?- டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை வெளியீடு

அரசு பணிகளுக்கு என்னென்ன தேர்வு?- டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை வெளியீடு
Updated on
1 min read

28 தேர்வுகள் மூலம் 3,781 காலியிடங்கள் நிரப்பப்படும்

இந்த ஆண்டு அரசு பணிகளுக்கு என்னென்ன தேர்வுகள் நடத்தப் படும் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுக் கால அட்ட வணையைடி என்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2017- ஆண்டுக் கான தேர்வுக் கால அட்ட வணையை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக் கால அட்டவணை என்பது எந்தெந்த பதவிகளுக் கான தேர்வுகள், நடப்பு ஆண்டில் வெளியிடப்பட வாய்ப்புள்ளது என்பதை தேர் வாணையத்தின் தேர்வுக்காக படித்துக்கொண்டிருக்கும் விண் ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கும், ஒரு தோராயமான பட்டியல் ஆகும். இந்தப்பட்டியலில் 3781 காலிப்பணியிடங்களை உள்ளடக் கிய 28 பணிகள் மற்றும் பதவி களுக்கான அறிவிக்கை மற்றும் தேர்வு நாள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலிடப்பட்ட பணிகள் மற்றும் பதவிகளில் ஏதேனும் ஒரு சில பதவிகளுக்கு தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக அட்டவணைக்குரிய காலத்திற்குள் நடத்தப்பட முடியாமல் போகும் தருணங்களில் அடுத்து வரும் ஆண்டுக்கு நீண்டு செல்லக் கூடும். தேவை ஏற்படும் தருணங் களில் பட்டியலில் குறிப்பிடப்படாத பணிகள், பதவிகளுக்கும் அறி விக்கை வெளியிட வாய்ப் புள்ளது.

இக் கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக் கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தேவைப்படும் இனங்களில் அரசின் பணியாளர் குழு ஒப்புதல் பெறப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது இந்தக் காலிப்பணியிட எண்ணிக்கை தேர்வுக்கு முன்னரோ அல்லது தேர்வுக்குப் பிறகும் கூட மாறுதலுக்குட்பட்டது. இக்கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டு நடத்தப்படவுள்ள அனைத்துத் தேர்வுகளின் முடிவுகள் வெளியிட விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு கள் அவ்வப்போது வெளியிடப் படும். தேவை ஏற்பட்டால்,

இப்பட்டியலில் குறிப் பிடப்பட்டுள்ள செய்திகள் சார்ந்த எந்த ஒரு மாற்று அறிவிப்பையும் வெளியிடுவதற்கான உரிமை யைத் தேர்வாணையம் தன்ன கத்தே கொண்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட வரு டாந்திர தேர்வுக்கு கால அட்ட வணையை தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) தெரிந்து கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in