

திமுக செயல் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலி னுக்கு காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் குலாம்நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள், விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், கவிஞர் வைர முத்து உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வெடுத்து வரு கிறார். எனவே, நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை யில் உள்ள ஸ்டாலின் இல்லத்துக்கு நேற்று வருகை தந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிகுமார் ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். திமுக வர்த்தக அணி தலைவர் கவிஞர் காசி முத்துமாணிக்கமும் வாழ்த்து தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலினை கவிஞர் வைரமுத்து நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் வீட்டுக்குச் சென்ற ஸ்டாலின், மாறனின் உருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, முன்னாள் எம்.பி. பீட்டர் அல் போன்ஸ், மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா, புதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன், தமிழறிஞர் சிலம் பொலி செல்லப்பன், தமாகா துணைத் தலைவர்கள் கோவை தங்கம், விடியல் சேகர், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் அறங்காவலர் ஓம்சக்தி அன்பழகன், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், தமிழ் மாநில தேசிய லீக் தலைவர் திருப்பூர் அல்தாப், மக்கள் தேசிய கட்சித் தலைவர் சேம நாராயணன், கொங்கு முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் தங்கவேல், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் கு.செல்லமுத்து, தொழிலதிபர் பழனி ஜி.பெரியசாமி உள்ளிட்டோர் நேற்று ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தொலைபேசியில் வாழ்த்து
காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத், காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேல், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், குன்றக்குடி பொன்னம்பல அடி களார், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.மோகன், முன் னாள் அமைச்சர் மாதவன் உள்ளிட்டோர் தொலைபேசியில் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரி வித்ததாக திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளி யிட்ட செய்தியில் தெரிவித் துள்ளது.